முகப்பு


 பிரசாந்தி நிகழ்வுகள்


 சாயி அவதாரம்


 
போதனைகள்


 இலங்கையில் சாயி


 அனுபவங்கள்


 சாயி நிலையங்கள்


 சஞ்சிகைகள்


 
வெளியீடுகள்


 பொது நிகழ்வுகள்

 
பதிவிறக்கங்கள்

 படங்கள்

 உங்கள் பக்கம்

 தொடர்புகளுக்க

 

 

 

 

  • இலங்கையில் சாயி திட்டங்கள்
            ஆன்மீகம்
            கல்வி
            சேவை

     

 

 


 

 

 

பகவான் சத்திய சாயி பாபாவுடன் புட்டபர்த்தியில் சில காலம் தங்கியிருந்த ஹில்டா சால்டன் என்ற அமெரிக்க அம்மையார் 1965 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்து பகவானைப் பற்றி அறிமுகம் செய்தார். இவர் முதலில் சந்தித்தவர்களுள் திரு எம்.இராஜநாயகம் (ஆணையாளர், தொழில் திணைக்களம்) திரு.சீ.பாலசிங்கள்(திறைசோp உப செயலாளர்) திரு.சீ.சண்முகநாயகமும் அடங்குவர். இவர்கள் எல்லோரும் சோ;ந்து பகவானை இலங்கைக்கு வரும்படி அந்த அம்மையார் மூலம் அழைப்பொன்றை அனுப்பி யிருந்தனர். அதற்கு பகவானும் வருவதாக பதில் கொடுத்திருந்தார். 1966 ஆம் ஆண்டு கொழும்பில் டாக்டர்.ஆர்.கே.பிள்ளை, திரு.கே.தியாகராஜா, டாக்டர்.ஏ.கணேசாள் ஆகிய மூவரின் வீடுகளில் சாயி பஜனை ஆரம்பமாகியது. இதே ஆண்டில் யாழ்ப்பாணத்தில் டாக்டர் சோமசுந்தரம் அவர்கள் வீட்டிலும் சாயி பஜனை ஆரம்பமாகியது.


1967 இல் கொழும்பிலுள்ள பக்தா;கள் ஒன்றுகூடி சத்திய சாயி சேவா நிறுவனத்தை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்தார்கள். இதற்கு டாக்டர்.ரி.நல்லநாதன் தலைவராகவும், திரு.சி.பாலசிங்கம் உபதலைவராகவும், திரு.கே.தியாகராஜா செயலாளராகவும், டாக்டர்(திருமதி)கணேசாள் மகளிர் தலைவியாகவும், டாக்டர் ஆர்.கே.பிள்ளை பொதுச்சபை அங்கத்தவராகவும் நியமிக்கப் பட்டனர். இக்குழு தொpவில் இந்துலால்ஷா அவர்கள ;தலமை வகித்தமை குறிப்பிடத்தக்கது. இக்கூட்டம் இராம கிருஷ்ணமிசன் மண்டபத்தில் இடம் பெற்றது. பின்னர் இக்குழுவின் தொpவுப் பட்டியல் சுவாமியின் சிபார்சுக்காக அனுப்பப்பட்டு பகவானின் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றது. பின்னர் உருத்திரா மாவத்தையிலுள்ள சிவானந்த நிலைய மண்டபத்தில் பஜனை கிரமமாக நடைபெற்று வந்தது.
1968 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாகக்குழுவினர் மும்பாயில்; இடம்பெற்ற முதலாவது உலக மகாநாட்டில் கலந்து கொண்டார்கள். பகவான் 1968 ஆம் ஆண்டு யூலை மாதம் கென்யாவிலிருந்து இந்தியா திரும்பியதும் இலங்கை வருவாரென சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்ட போதிலும் பகவான் வரவில்லை.
"பகவானின் செய்தி" என்ற சிங்கள நூல் 1968 இல் வெளியிடப்பட்டது. அப்போது பகவான் கொழும்பு சமித்திக்கு கையொப்பமிட்டு 17.2.1969 இல் அனுப்பியிருந்தார். அதன்படி 1969 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பொதுக்கூட்டம் நடத்தலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
1975 ஆம் ஆண்டு இரண்டாவது உலக மகாநாடு பிரசாந்தி நிலையத்தில் நடைபெற்றது. இக்காலத்தில் திருகோமலை> கல்முனை, யாழ்ப்பாணம், மாத்தளை ஆகிய இடங்களில் சாயி நிலையங்கள் உண்டாகிவிட்டன. இரண்டாவது உலக மகாநாட்டில் பகவான் திரு.சீ.பாலசிங்கத்தை உலகமகாசபையின் ஓர் அங்கத்தவராக நியமித்தார். அதேவேளை இலங்கை தேசிய சாயிநிறுவனத் தலைவராகவும், இணைப்புக்குழுத் தலைவராகவும் நியமனம் பெற்றார். இதனால் 1985 இல் இது பிராந்தியம் 13 இன் கீழ் தனி வலயமாக்கப்பட்டது. இதன் முதலாவது மத்திய இணைப்பாளராக திரு.எஸ்.சிவஞானம் அவர்கள் நியமிக்கப்பட்டார். இதன் பிரதி இணைப்பாளராக திரு.எம்.வன்னியசேகரம் நியமிக்கப்பட்டார். வயோதிபம், உடல் நலமின்மை காரணமாக சிவஞானம் மத்திய இணைப்பாளர் பதவியிலிருந்து விலக விருப்பம் தொpவித்து இந்துலால்ஷா அவர்களிடம் வேண்டிக் கொண்டார். இதனை ஏற்றுக் கொண்டு 2000.11.22 திகதி மத்திய இணைப்பாளராக  எம்.வன்னியசேகரம் நியமிக்கப்பட்டு 2009 பெப்ரவரி வரை செயற்பட்டார். தற்போது பேராசிரியர் .சுனந்தடெகம்பொட தலைவராகக் கொண்ட நிர்வாகக் கட்டமைப்பு செயற்படுகின்றது.


இலங்கையில் சத்திய சாயி சேவா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 43 வருடங்கள் பூர்த்தி யடைந்துள்ளது. ஆசியாவில் இரண்டாவது பழமையான நிறுவனமாக இது விளங்குகிறது. அடுத்தாக மலேசியா விளங்குகிறது.


உலகளாவிய நிர்வாக செயற்பாடுகளினை நோக்காகக் கொண்டு இலங்கை வலயம் 3 என்ற வகுதிக்குள் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அலுஸ்திரேலியா, நியூசிலாந்து, பபு, நியு குணே, தாய்லாந்து, இந்தனோசியா, இலங்கை, நேபாளம், பர்மா எனும் 8 நாடுகளையும் உள்ளடக்கியதாகவுள்ளது. .
;

இலங்கைக்குள்ளும் நிர்வாக செயற் பாட்டுகளினை நோக்காகக் கொண்டு 5 வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. (தென்மேற்கு> மத்திய> வடக்கு> வட மத்திய> கிழக்கு) 5 வலயங்களிலும் 130 நிலையங்களும்> பஜனை நிலையங்களும் அமைந்துனள்ளன. 5 லயங்களிலும் 128000 அங்கத்த வர்கள் இருக்கின்றனர். பல சாயி நிலையங்களுக்கு ஏராளமான பக்தா;கள் வருகை தந்து செல்கின் றார்கள் ஆனால் அவர்கள் பதிவு செய்யப்படாமலேயே வந்து செல்வதால் இக்கணக்கில் உள்ளடக் கப்படவில்லை. ஏறக்குறைய இரண் டரை இலட்சம் பேரளவில் 5 வலயங்களிலும் இருக்கின்றார்கள் எனலாம்.

(நன்றி :

www.srisailanka.org, சாயிமார்க்கம் இதழ் 36)