இளைஞர்களுக்கானவை
இளைஞர்களுக்கான
அறிவுரைகள்
இளைஞர்களே, யுவதிகளே!
இவ்வுலகின் வருங்கால குடிமக்களே!
ஒழுக்கம்
இவ்வுலகின் எதிர் காலம், நன்மையோ அன்றித் தீமையோ - எதுவானாலும்
உங்களது நடத்தையைப் பொறுத் தே அமையப் போகிறது. இவ்வுலகம்
பாதுகாப் பாகவும், பத்திரமாகவும், அமைதியாகவும், வள மாகவும் இருக்க
வேண்டுமானால் உங்கள் நடத்தையும் ஒழுக்கமும் நல்லதாக இருக்க வேண்டும்.
இவ்வுலகத் திற்குத் தற்போதய தேவை, ஆடம்பரமும், உலகியல் சுகங்களும்
அல்ல, மேன்மையான குணங்களும், நல் ஒழுக்கமும் நிறைந்த ஆடவரும்,
பெண்டிரும் தான். சரியான வழிமுறைகளில், இளைஞர்கள் மற்றும்
யுவதிகளின் நடவடிக்கைகள் அமையாமல் போகு மானால் நாடு துண்டு
துண்டாகச் சிதறிவிடும்.
சத்யம், தர்மம், தியாகம் ஆகியவற்றைப்
பின்பற்றி நடப்பவனே உண்மையான மனிதன். சத்யம் என்பது நீதி, தர்மம்
என்பது ரீதி, தியாகம் என்பது க்யாதி. இவை மூன்றும் சேர்ந்தே
மானவஜாதி. (மனித குலம்). இந்த மனித குலம் சத்யத்திலிருந்து
உருவாயிற்று.
இந்தப் படைப்பு அனைத்தும் சத்தியத்திலிருந்தே
பிறந்து உருவாகிக் கடைசியில் சத்தியத்திலேயே ஐக்கிய மாகிறது. சத்யம்
இல்லாத இடமே இவ்வுலகில் இல்லை. இந்தத்துய கலப்பற்ற உண்மையைப்
புரிந்து கொள்ளுங்கள்.
(பாடல்)
இதை ஆதாரமாகக் கொண்டே பண்டைய முனிவரும், மகரிஷிகளும்
ஸத்யம் ப்ருயாத்,
ப்ரியம் ப்ருயாத்,
ந ப்ருயாத் சத்யமயப்ரியம்
(உண்மையே பேசு இனிமையாகப் பேசு, மனதிற்கு ரசிக்காத உண்மையைப் பேசாதே)
இங்கே ஸத்யம் ப்ருயாத் என்பது
நேர்மை என்னும் குணநலனைக்
குறிப்பிடுகிறது. மானவ ஜாதி (மனித குலம்) நீதி (நேர்மை, ஒழுக்கம்)
இன்றி வாழ முடியாது.
ஸத்யம்
அநியாயம். பொய்மை. அதா;மம. இவற்றால்
எல்லாம் சூழப்பட்டு இன்றைய உலகம் தத்தளிக்கிறது. சாpந்து வரும்
மனித உயர்குண நலன்களை மீட்டு வந்து நிலை நாட்ட இளைஞகளாலும். யுவதிகளாலும் மட்டுமே முடியும். மனிதன் நோ;மையைப் போற்றி அதன் வழி
நடக்கும் போது தான் சமத்துவம். சகோதரத்துவம். சுதந்திரம் ஆகிய சமுதாயத்தில் நிலவும். நேர்மையை தன் வழிமுறையாகக் கொள்ள வேண்டு
மானால் மனிதன் சத்யத்தை ஒட்டி நடக்க வேண்டும். இதனால் தான் ஸத்யம்
ப்ருயாத் எனக் கூறுகிறார்கள். இது தான் மனிதனின் தலையாய கடமை.
இரண்டாவது, ப்ரியம் ப்ருயாத் (இனிமையாகப் பேசுங்கள்). இது தா;மம்
என்னும் குண நலனைக் குறிக்கிறது.
இதைத்தான் அடிப்படையாகக் கொண்டு
பகவத் கீதை
அனுத்வேக கரம் வாக்யம் ஸத்யம் ப்ரிய ஹிதம் ச யத்
(சத்யத்தை இனிமையாகவும், முழுமையாகவும் பேசுங்கள். உங்களது பேச்சு. மற்றவர்களது உணர்வுகளையும் உணர்ச்சிக ளையும் துண்டிவிடுவதாக அமையக்
கூடாது) மூன்றாவது ந ப்ருயாத் சத்யம ப்ரியம் என்பது ஆன்மீக
குண நலனைக் குறிப்பிடுகிறது. ஆன்மீகப் பாதையில் செல்ல இந்தக்
குணநலன்களை மனிதன் கைக்கொள்ள வேண்டும்.
அன்பின் வடிவங்களே!
ஹிமாசலம்
இந்தியாவின் வட எல்லையாக இருப்பது
ஹிமாசலம் என்கிற இமயமலை. ஹிமாசலம் என்பதற்கு உட்புற அர்த்தம் என்ன?
ஹிமா என்றால் பனி. அல்லது பனிக்கட்டி. அது தய்மைக்கும். அமைதிக்கும் எடுத்துக் காட்டாய் இருக்கிறது. அசல் என்பது நிலையான. சலனமற்ற என்பது பொருள். ஆகவே ஹிமாசலம் என்பது துய்மை. அமைதி. நிலையான ஒன்று என்பனவற்றைக் குறிக்கின்றது. வற்றாத ஜீவ நதிகளான
கங்கை, யமுனை. சரஸ்வதி ஆகியவை மனித உடலில் ஓடும் இடைவிடாத இரத்த
ஓட்டத்தை உருவகப் படுத்துகின்றன. இராமாயணம். மகாபாரதம். பாகவதம்
போன்ற இதிகாசங்கள், மனித இயல்புகளின் சாரத்தை வெளிப்படுத்
துகின்றன.
பாரத நாட்டின் ஆதர்சங்களை மதித்து அதன்
வழி நடப்பவனைத்தான் உண்மையான பாரத நாட்டவன் என அழைக்க முடியும்.
பாரதம் என்ற வார்த்தையில் பா என்பது பாவத்தையும் (உள்ளுணர்வுகளையும்).
ரா என்பது ராகத்தை யும். தா என்பது தாளத்தையும் சுட்டிக்
காட்டுகின்றன. பாவம். ராகம். தாளம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இறைவனை
வழிபடுபவர்கள் பாரத நாட்டவர் எனப் பொருள் கொள்ளலாம். இதனைவிடச்
சிறந்த தகுதி வேறெதுவும் இல்லை. பாரத நாடு மட்டும் தான் இவ்வுலகம்
முழுமைக்கும் ஆன்மீக ஞானத்தைப் பரவச் செய்கிறது. அது மட்டுமல்லாமல். இவ்வுலக மாந்தர் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் எனவும்
விரும்புகிறது. லோகா ஸமஸ்தா ஸூகினோ பவந்து (இந்த உலகம் முழுவதும்
மகிழ்ச்சியாக இருக்கட்டும்) எனவும் வாழ்த்துகிறது.
ஆத்மதத்துவம்:
நீங்கள் அனைவரும் ஒன்றே எந்த தேசத்தைச்
சோ;ந்தவராயினும் சாp. பல்புகள் வேறானாலும். அவற்றினுள் பாயும்
மின்சாரம் ஒன்றே. அதைப் போலவே நாடுகள். உடல்கள். உணர்வுகள்
இவையெல்லாம் வேறு வேறாயினும் ஆத்ம தத்துவம் மட்டும் அனைத்திலும்
ஒன்றே. ஆகவே ஜாதி. மதம். தேசியம் ஆகியவற்றின் பெயரால் வேறுபாடுகளைத்
துறந்து. ஒற்றுமயின் செய்தியை எல்லோரிடத்தும் பரவச் செய்யுங்கள்.
நாடுகள் பல ஆயினும் மண் ஒன்றே!
நகைகள் பல ஆயினும் தங்கம் ஒன்றே!
பசுக்கள் பல ஆயினும் பால் ஒன்றே!
உடல்கள் பல ஆயினும் மூச்சு ஒன்றே!.
இவ்வாறு
அனைத்து உயிரினங்களிலும் ஒற்றுமை கண்டு நீங்கள் சேவை புரியும் போது
தான் ஆனந்தம் அனுபவமாகிறது.
நீங்கள் அன்பிலேயே பிறந்தீர்கள், அன்பிலேயே
வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள். அன்பிலேயே ஐக்கியமாகிறீர்கள்.
பஞ்சபூதங்கள் சுயநலமற்ற தன்மைக்கு முழுமையான வடிவங்கள். சூரியன்,
சிருஷ்டிக்கப்பட்ட உயிரினங்களுக்கு ஒளியும், வெப்பமும், வாழ்வும்
தந்து போஷிக்கிறது. மரங்கள் காpயமில வாயுவைத் தன்னுள்ளே ஏற்று
மனித வாழ்க்கைக்குத் தேவையான பிராண வாயுவைத் தருகின்றன. தாய்
போன்ற மண்ணோ, பொறுமைக்கும், தியாகத்துக்கும் எடுத்துக்காட்டாய்
பாடம் போதிக்கிறது. எந்த விதமான பிரதியுபகாரமும் எதிர் பாராமல் இவை
மனித குலத்திற்குத் தொண்டாற்றுகின்றன. இயற்கையை விட சுயநல மற்ற
அன்பிற்குச் சிறந்த உதாரணம் வேறெதுவும் இல்லை. இயற்கையில் பிறந்து,
இயற்கையினாலேயே போற்றிப் பாதுகாக் கப்படும் மனிதன், இயற்கை
வெளிப்படுத்தும், இத்தகைய நற்குணங்களைத் தன்னககத்தே கொள்ளாமல்,
சுயநலமும், சுயலா பமும் கொண்ட வாழ்க்கை வாழ்வது மிகவும்
அவமானகரமானது. இளைய தலைமுறை யினர் சுயநலத்தையும், சுயலாபத்தையும்
ஒரு சிறிய துளி கூட மிச்சமிராமல் வேரோடு களையவேண்டும்.
அனைவரும் ஒன்றே
ஜீசஸ் கூறினார்: என் அருமை மகனே
அனைவரும் ஒன்றே அதனால் அனைவருடனும் ஒரே மாதிரியாகப் பழகு அனைவரும்
இதே தாய் மண்ணில்தான் பிறந்தோம். இதே காற்றைத் தான் சுவாசிக
்கிறோம். இதே
நீரைத்தான் பருகுகி றோம். அப்படியிருக்கையில் ஏன் இந்த வேற்றுமைகள்
எல்லாம்? அனைத்து வேற்றுமை களையும் உதறிவிட்டு ஒற்றுமையுடன்
வாழுங்கள். வேற்று மையில் ஒற்றுமை உள்ளதென உணருங்கள். இதன்படி
வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கிராமங்களுக்குச்
சென்று தேவையானவர்களுக்கு வேண்டிய சேவைகளைச் செய்யலாம். கிராமப்புற
முன்னேற்றத் திட்டங்களை செயல்ப் படுத்தலாம். அவ்வாறு செய்வதால் நீ
ஏதோ பெரிய சேவை செய்துவிட்டதாக நினைக்காதே. உண்மையில் சொன்னால்
இதெல்லாம் உன்னுடைய கடமை. நீ சேவை செய்வதற்காகப் பிறந்தவன். ஆகவே
பிறருக்குச் சேவை செய்வதில் உனது வாழ்நாளைச் செலவிடு. பதவிக்கும்.
அதிகாரத்திற்கும் ஏக்கப்படாதே. யார் சேவகனாக இல்லையோ அவனால்
நாயகனாக (தலைவனாக) விளங்க முடியாது. உண்மையில் ஒரு உண்மையான சேவகனே
உண்மையான நாயகன்.
தியானமா?
மக்கள் ஜபம். த்யானம். தவம் ஆகியவையெல்லாம் தான் ஆன்மீகப் பயிற்சி
முறையென்ற தவறான நோக்கத்தில் இருக்கின்றனர். தியானம் என்றால் என்ன
என்பதை அறியாமல் தியானம் செய்கின்றனர். தாங்கள் கடவுளின் மேல்
தியானம் செய்வதாகச் சொல்கிறார்க. ஆனால் கடவுள் யாரென்று
அவர்களுக்கே தொpயாது! ராம. கிருஸ்ண. யேசு. அல்லா. ஜொராஷ்டிரா
என முணு முணுத்து அவர்களைத் தியானிக்கிறார்கள். ஆனால் அனைவருமே
கடவுளரின் வடிவங்கள் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளவில்லை. மனம்
குவித்துக் காண்பதை தியானம் எனத் தவறாக எண்ணுகிறார்கள். மனக்
குவிப்பு என்பது புலன்கள் சம்பந்தப் பட்டது. ஆனால் தியானம் என்பது
மன எல்லைகள் அனைத் தையும் கடந்தது. தியானம் என்பதை ஒரு குறிப்பிட்ட
காலத்துக்கோ. இடத்துக்கோ குறுக்கிவிடக் கூடாது. அது ஒரு வாழ்க்கை
முறை. அன்பெனும் உணர்வோடு செய்யப்படும் அனைத்தும் தியானமே!
மனிதர்களிடம் அன்பு செலுத்தாமல். மணிக்கணக்காக தியானத்திற்காக
உட்காருவது என்பது தியானமே அல்ல. உண்மையான ஆன்மீக சாதனை என்பது
அனைவருடனும் கைகோர்த்து சமுதாயம் முழுமைக்குமாக உழைப்பது தான்.
அதன் மூலம் சமுதாய முன்னேற்றம் ஏற்பட வேண்டும். அன்பே கடவுள் ஆகவே
அன்பிலேயே வாழுங்கள். அன்பற்ற இதயம் வறண்ட தாpசு நிலத்திற்குச்
சமம். அனைத்துச் செயல்பாடுகளும் அன்புடன் இணைந்திருக்க வேண்டும்.
புதிதாகப் பிறந்த குழந்தை எப்படி பட்டப் படிப்புக்கான
வகுப்புக்களுக்குச் செல்ல முடியாதோ, அதே போலத்தான் உயர்ந்த
ப்ரேமை தத்துவத்தை உடனடியாக அடைய முடியாது. கொஞ்சம், கொஞ்சமாக
ஆன்மீகப் பயிற்சிகளைச் செய்து, படிப்படியாக முன்னேற வேண்டும் உள்
நோக்கித் தன் பார்வையைச் (நிவ்ருத்தி) செலுத்தத் தயாராகும் வரை.
இந்த வெளிப்புற (ப்ரவ்ருத்தி) மார்க்கமான வழிமுறைகளை மேற் கொள்ள
வேண்டும். எந்த ஒரு செயலையும் ஆன்மீகப் பார்வையோடு அணுகுங்கள்.
சத்யம். பிரேமை இவற்றைப் பின்பற்றிச் செய்வதைவிடச் சிறந்த ஆன்மீகப்
பயிற்சி முறை வேறெதுவும் கிடையாது. சத்யமும். ப்ரேமையும் இறைவனின்
பெயர்கள். ஆகவே இவை இரண்டுமின்றி ஆன்மீக சாதனை களை மேற் கொள்வதில்
அர்த்தமில்லை.
தியாகம்:
இளைஞர்களே!
யுவதிகளே!
அன்பையும், தியாகத்தையும்
உங்களது பிராணனாக, மூச்சுக் காற்றாக எண்ணுங்கள். உங்கள் புலன்களை
அடக்குங்கள். எந்த ஒரு ஆன்மீக சாதனை வெற்றி பெற வேண்டுமானாலும்,
புலனடக்கத்தின் மூலம் தெய்வீகமாக உயரமுடியும். கோபம் என்பது நாயின்
இயல்பு. சலனப்படுத்திக் கொண்டே இருப்பது குரங்கின் குணம். உனக்குக்
கோபம் வரும் போது நான் நாயல்ல, நான் மனிதன் என்று நினைவு
படுத்திக் கொள்ளு ங்கள். அதைப் போலவே மனம் அலை பாயும் போது
உனக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள் நான் குரங்கல்ல. நான்
மனிதன் என்று. சத்யம். தர்மம். சாந்தி. ப்ரேமை. அஹிம்சை ஆகியவை தான்
உண்மையான மனித உயர் குண நலன்கள். இந்தக் குணநலன்களை மனிதன் பஞ்ச
பிராணன் களுக்கு ஒப்பிடலாம் - பிராண. அபான. வ்யான. உதான மற்றும்
சமான. இந்த குணநலன்கள் ஏதாவது ஒன்றை இழந்தாலும் கூட வாழ்க்கையையே
துறந்து விடுவதைப் போன்றது. ஒரு குணநலனும் மற்றொன்றின்றி வாழ
இயலாது. இக் குணநலன் களை இழந்து விட்டதால் மனிதன் இன்று வாழும்
பிணமாக இருக்கிறான். இக்குண நலன்களின் மேல் நம்பிக்கையை
வளர்த்துக்கொள்ளுங்கள். அவற்றைப் போற்றி வளர்த்து. அவற்றிடமிருந்து கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவியு ங்கள்.
அன்பையும், தியாகத்தையும் உங்களது பிராணனாக, மூச்சுக் காற்றாக
எண்ணுங்கள். உங்கள் புலன்களை அடக்குங்கள். எந்த ஒரு ஆன்மீக சாதனை
வெற்றி பெற வேண்டுமானாலும், புலனடக்கத்தின் மூலம் தெய்வீகமாக
உயரமுடியும். கோபம் என்பது நாயின் இயல்பு. சலனப்படுத்திக் கொண்டே
இருப்பது குரங்கின் குணம். உனக்குக் கோபம் வரும் போது நான்
நாயல்ல, நான் மனிதன் என்று நினைவு படுத்திக் கொள்ளுங்கள். அதைப்
போலவே மனம் அலை பாயும் போது உனக்குள் திரும்பத் திரும்பச்
சொல்லிக் கொள் நான் குரங்கல்ல, நான் மனிதன் என்று. சத்யம், தர்மம்,
சாந்தி, ப்ரேமை, அஹிம்சை ஆகியவை தான் உண்மையான மனித உயர் குண
நலன்கள். இந்தக் குணநலன் களை மனிதன் பஞ்ச பிராணன் களுக்கு
ஒப்பிடலாம் - பிராண, அபான, வ்யான, உதான மற்றும் சமான. இந்த
குணநலன்கள் ஏதாவது ஒன்றை இழந்தாலும் கூட வாழ்க்கையையே துறந்து
விடுவதைப் போன்றது. ஒரு குணநலனும் மற்றொன்றின்றி வாழ இயலாது. இக்
குணநலன்களை இழந்து விட்டதால் மனிதன் இன்று வாழும் பிணமாக
இருக்கிறான். இக்குண நலன்களின் மேல் நம்பிக்கையை வளர்த்துக்
கொள்ளுங்கள், அவற்றைப் போற்றி வளர்த்து, அவற்றிடமிருந்து
கிடைக்கும் ஆனந்தத்தை அனுப வியுங்கள்.
எங்கே
நம்பிக்கை இருக்கிறதோ, அங்கே அன்பிருக்கிறது.
எங்கே அன்பிருக்கிறதோ, அங்கே அமைதியிருக்கிறது.
எங்கே அமைதியிருக்கிறதோ, அங்கே ஸத்யம் இருக்கிறது.
எங்கே ஸத்யம் இருக்கிறதோ, அங்கே கடவுள் இருக்கிறார்.
எங்கே கடவுள் இருக்கிறாரோ, அங்கே ஆனந்தம் நிறைகிறது.
ஆனந்தம்:
இன்று
ஒவ்வொரு மனிதனும் ஆனந்தமாக இருக்கவே விரும்புகிறான். அதற்கு
நம்பிக்கை என்பது முதலில் அவசியம். ஆனந்தத்தைப் பெறுவது சுலபமல்ல.
ஆனந்தம் என்பது பிரம்மன், நிலையாக. துயதாக, நிரந்தரமானதாக. இரட்டை
நிலையைக் கடந்ததாக இருக்கக்கூடியது. தீய குணங்களைக் கைவிடாமல்
மனிதன் இந்த உயர்ந்த ஆனந்தத்தை அனுபவிக்க இயலாது. இதயம் என்பது
இறைவனின் கருவறை. அதனைத் தீய எண்ணங் களாலும். தீய உணர்வுகளாலும். மாசுபடுத்தி விடாதீர்கள்.
எந்த ஒரு தனி மனிதச் செயற்பாடுகளிலும்,
சுய முயற்சி என்பது வெற்றியடைய மிகவும் அத்தியாவசி யமானது. ஒரு
சிறிய பூவைப் பறிப்பதானாலும். அன்றி மரத்தினின்று பழம் பறிப்பதா
னாலும் கூட உடலின் பல அங்கங்களான கண்கள். கரங்கள். கால்கள்
ஆகியவற்றின் ஒத்துழைப்புத் தேவையாகிறது.
ஸாPர மாத்யம் கலு தர்ம ஸாதனம். உடல்
கொடுக்கப்பட்டிருப்பது நல்ல தர்மமான வழியில் செயலாற்று வதற்கும்>
அதன் மூலம் சமுதாயத்திற்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டாய்
விளங்குவதற்கும் மட்டுமே அல்லாது வீணே உறங்குவதற்கும். உண்பதற்கும். பருகுவதற்கும். மகிழ்ச்சியை அனுபவிப்பதற்குமா கடவுள் மனிதனுக்கு
அத்தனை சக்தி களையும் பரிசாகக் கொடுத் திருக்கிறார்? ஆனால் மனித
னால் தன்னுள் இருக்கும் சக்திகளைப் புரிந்து கொள்ளத்தான் இயலவில்லை.
நலன்:
எந்த
ஒரு செயலைச் செய்வதானாலும், மற்றவருடைய நலனைக் கருத்தில்
கொள்ளுங்கள். சுயநலமான வாழ்க்கை வாழாதீர்கள். அனைவருடைய நலனையும்
கவனியுங்கள். தனிப் பட்ட பலன்களை மட்டும் எண்ணாதீர்கள். ஜபம்,
தியானம் போன்றவை சுயநல நோக்குடன் செய்யப் படுகின்றன. இதற்குப்
பதில், இறைவன் பெயரைச் சொல்லியவாறு, சமுதா யத்தில் இறங்கி சேவை
செய்யுங்கள். இதுவே உண்மையான சாதனையாக அமையும். நீங்கள் யாருக்கு
சேவை செய்தாலும், இறைவனுக்கு செய்வதாக எண்ணிக் கொண்டு செய்யுங்கள்.
இதயத்தில் தயை நிரம்பியிருந்ததால் ஒரு
உயிரற்ற சவம், ஒரு நோயாளி, வயது முதிர்ந்த ஒரு மனிதன் ஆகிய வர்களைப்
பார்த்ததுமே புத்தருக்கு ஞானம் புலப்பட்டு, அவரால் நிர்வாண நிலையை
அடைய முடிந்தது. நீங்கள் எத்தனையோ சவங்க ளையும், வயது
முதிர்ந்தோரையும், நோயாளிகளையும் பார்க்கி றீர்கள். ஆனால்
உங்களிடத்தில் அத்தகைய மனமாற்றம் ஏற்படா தது வருந்தத்தக்கது.
துரதிஷ்டவசமாக, உங்கள் இதயங்கள் கடினமான பாறைகளாக
மாறிவிட்டிருக்கின்றன. அடுத்தவரின் துயரம் உங்கள் இதய ங்களைக்
காயப்படுத்துவதில்லை. நிர்வாணம் அல்லது பந்த விடுதலை அடைய
வேண்டுமென்றால், அடுத்தவரது துயரத் துடன், தன்னையும் இணைத்துப்
பார்த்து, அவர்களது துயர் களைய முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.
மனம்
துணைவேந்தர் தனது பேச்சில்
குறிப்பிட்டது போல
'Bend
the body, Mend the senses, end the Mind".
புலன்கள் கட்டுப் படுத்தப் பட்டால்,
மனம் என்பது இல்லாமலேயே போய்விடும். நல்ல எண்ணங்களைப் போற்றி
வளர்க்கையில் மனதை அழித்துச் சாம்பலாக்கி விடலாம். மனிதனின்
எண்ணங்கள் மாறுபாடாக, ஒழுங்கு கட்டுப்பாடில்லாமல் போவதால் இன்று
உலகமே தலைகீழாகப் போய்க் கொண்டிருக்கிறது.
மனிதா!
உனக்குள்ளேயே கேட்டு விசாரித்துத் தெரிந்து கொள். காலையிலிருந்து
மாலை வரை, இறைவனை மறந்து விட்டு, உயிர் வாழ்வதற்காக உழைப்பதில் உன்
கல்வியையும், சக்தியையும் வீணடித்துக் கொண்டிருக்கிறாயே! இதில்
என்ன சுகம் கண் டாய்" (பாடல்)
நீங்கள் எது செய்தாலும், அது கடவுளின் பணி. உதாரணமாக, நீங்கள்
மூச்சு விடுவதும் கூட - உள் மூச்சு, வெளி மூச்சு ஒரு ஆன்மீக
சாதனைதான். மூச்சை உள்ளிளுக்கும் போது, அது ஸோ என்ற ஒலியுடன் (அது),
இணைத்துப் பார்க்கப்படுகிறது. மூச்சை வெளிவிடும் போது, ஹம் (நான்)
என்ற ஒலியுடன் வெளிவருகிறது, ஆகவே ஸோஹம் என்பது
I am That
(இறைவன்) என்ற பொருள் தருகிறது.
ஸோ என்பது தெய்வீகத்தையும் அஹம் என்பது அஹங்காரத்தையும்
குறிக்கிறது. ஆகவே ஸோஹம் என்பது நல்லதை உள்ளிழுத்து அல்லதை
வெளித்தள்ள வேண்டும் என்பதை பாடமாகக் கற்பிக்கிறது. இந்த உள் மூச்சு,
வெளிமூச்சு என்பவை ஒரு நாளில் 21>600 முறை தொடர்ந்து நடைபெறுகிறது.
அதாவது உன்னுள் ஒரு குரல், ஒரு நாளைக்கு 21>600 முறை உன்னைக் கடவுள்
நீ தான் என உணர்த்துகிறது. துரதிருஷ்டவசமாக நீதான் அந்தச் செய்தியை
ஏற்கத் தயாராக இல்லை. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளத்தான், இறைவன்
உனக்கு இந்த உடலைப் பரிசாகத் தந்திருக்கிறார்.
சமுதாயம்
கரங்கள், கண்கள், காதுகள், மூக்கு போன்றவை தேகத்தின் அங்கங்கள்.
அது போலவே மனிதா;கள் இந்த சமுதாயத்தின் அங்கங்கள். சமுதாயம் இந்த
பிரக்ருதியின் அங்கம், பிரக்ருதி கடவுளின் அங்கம். இதன் மூலம்,
தனிப்பட்ட மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையே உள்ள அத்தியந்த உறவைப்
பற்றி நீ புரிந்து கொள்ளலாம். உயிரற்ற ஜடங்களான தொலைபேசி
போன்றவைக்கே இணைப்புகள் ஏற்படுத்த முடியுமென்றால்> மனிதனுக்கும்,
இறைவனுக்குமிடையே இணைப்பு இருக்க வேண்டாமா? முதலில் சொன்ன
இணைப்புகள் எல்லாம் செயற்கை. ஆனால் இந்த இணைப்பு இதயம்
சம்பந்தப்பட்டது. இதயத்துக்கு இதயம் இணையும் இணைப்பு இரண்டு வகை
தொலைபேசி அழைப்புகள் உண்டு. ஒன்று நம்பர் மூலம் அழைப்பது. அதனை
யார் வேண்டுமானாலும் ஏற்றுப் பேசலாம். இரண்டாவது தனிப்பட்ட
நபருக்காக மட்டுமே
(P.P.Call)
ஏற்படுத்தப்பட்டது. அதைப்போல உங்களது இணைப்புகள் எல்லாம் நேராக
இறைவனோடு இருக்க வேண்டும்
P.P.Call போல, உங்களுக்கு
இறைவன் வேண்டும் என்ற உண்மையான உணர்வு மட்டும் இருக்குமானால்,
இறைவனே நேரில் உங்களிடம் வந்து பேசுவார். நீங்கள் நம்பர் கோல்
போல பேசினால், இறைவன் பதில் கூறமாட்டார். இங்கே நம்பர் கால் என்பது
எதிர் மறையான எண்ணங்கள். ஆகவே எதிர் மறையான (நெகடிவ்) எண்ணங்களை
விட்டு விட்டு பாஸிட்டிவ் எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
மனச்சாட்சி:
தேகம், மனம், புலன்கள்
மற்றும் புத்தி இவை எல்லாம் இயல்பாகவே நெகடிவ் தான். மனசாட்சி
மட்டுமே பொஸிட்டிவ் ஒலி பெருக்கி மின் இணைப்புத் தரப்படாததால்
எப்படிப் பயன் படுவதில்லையோ, அதைப் போல உடல், மனம், புலன்கள்,
புத்தி இவையனைத்தும் மனச்சாட்சி இன்றிப் பயனற்றுப் போகின்றன.
ஒவ்வொருவரிடமும் இருக்கும் மனச்சாட்சி ஒன்றே தான். உதாரணமாக
எத்தனையோ பல்புகள் இருந்தும், அவற்றினூடே செல்லும் மின்சாரம் ஒன்றே
தான். அதனால்
All are one, Be alike to every one.
அதனால் யாரையும் வெறுக்காதீர்கள்>
துன்புறுத்தாதீர்கள் அல்லது விமர்சிக்காதீர்கள், எவனொருவன்
யாரையும் துன்புறுத்தாமல் அதே நேரத்தில் தானும் புண்பட்டு விடாமல்
பார்த்து நடக்கிறானோ அவனே மனிதருள் மேன்மையானவன்.
ஆன்மீக சாதனை:
உண்மையான ஆன்மீக சாதனை என்பது. அனைத்து வேலைகளையும் இறைவனின்
பணியாக எண்ணிச் செய்வது தான். வெறும் ஜெபம், தியானம் இவையெல்லாம்
அல்ல, கடவுள் எங்கும் நிறைந்தவர். இதனைத்தான் வேதம் இவ்வாறு உரைக்
கிறது.
ஸர்வதப்
பாணிபதம் தத்
ஸர்;வ தோட்சி ஸிரோ முகம்,
ஸர்வ ஸ்ருதி மல்லோகே ஸா;வமாவ்ரித்ய திஷ்டதி!
(அவரது கண்கள், கரங்கள், பாதங்கள், சிரங்கள், வாய், காதுகள் எல்லா
இடத்திலும் வியாபித்திருக்க, கடவுள் இப்பிரபஞ்சம் முழுவதையும்
ஊடுருவி நிற்கிறார்).
நீங்கள் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம். ஆனால் கடவுளை மட்டும்
ஏமாற்ற முடியாது. அவர் எப்போதும் உங்களைக் கவனித்துக்
கொண்டிருக்கிறார். அவர் நிரந்தர சாட்சி. அவர் உன்னிடம் இருக்கிறார்.
எப்படி . . உன் கண்ணில் பார்வை எங்ஙனம் நிறைந்திருக்கிறதோ அப்படி
ஒரு புல்லின் நுனியும் கூட அவரது சங்கல்ப்பமின்றி அசையாது. நான்
செய்தேன் என்ற எண்ணத்தில் மயங்கி விடுவது முட்டாள் தனம். ஆகவே உனது
சாதனைகளைப் பற்றிய வீண் பெருமை வேண்டாம். இறைவனே செய்கின்றான்> அதன்
பலனையும் அனுபவிக்கின்றான் என்ற புனித உணர்வுகளை வளர்த்துக்
கொள்ளுங்கள். எல்லாமே இறைவனின் சங்கல்ப்பம் என்ற எண்ணம் வேண்டும்.
உனக்கு எது நடந்தாலும், அது லாபமோ, நஷ்டமோ, துன்பமோ, மகிழ்ச்சியோ,
அது கடைமுடிவாக உனக்கு நன்மையையே தரும் என்ற உறுதியான நம்பிக்கையை
வளர்த்துக் கொள். மலேரியாவில் பாதிக்கப்பட்ட வனுக்கு டாக்டர்கள்
கசப்பான மருந்தினைத்தான் தருவார்கள். அந்தக் கசப்பு மருந்தைச்
சாப்பிடாவிட்டால், அவனுக்கு மலேரியா குணம் ஆகாது. அதைப் போல
இடர்களும், துன்பங்களும், இறைவன் உன்னைத் து}ய்மையாக்கத்
தோ;ந்தெடுக்கும் வழிகள் என நிச்சயமாக நம்புங்கள். இறைவன் என்ன
செய்தாலும், அதன் பின்னணியில் ஒரு காரணம் இருக்கும். காரணமும்,
விளைவுகளும் என்பதன் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் மக்கள்
தங்கள் கஷ்டங்களுக்கு இறைவனைத் து}ற்றுகிறார்கள். துன்பமோ, இன்பமோ
எது வந்தாலும் அதற்குக் காரணம் நீ மட்டுமே, என்ற உண்மையைப் புரிந்து
கொள். உன்னை யாராவது விமர்சித்தால், அதற்காக வருந்தாதே. யாரையாவது
விமர்சிக்கும் போது நம்மையே விமர்சித்துக் கொள்வதாக ஆகிறது.
ஏனெனில் அதே ஆத்மா தான் எல்லோருள்ளும் நிறைந்து காணப்படுகிறது.
உடல் ஒரு நீர்க்குமிழி. அதனால் அதனை நம்பாமல் ஆத்மாவை நம்புங்கள்.
உங்களை யாராவது அடித்தால், திரும்ப அடிக்காதீர்கள். அதே ஆத்மதத்
துவம்தான் இருவருள்ளும் நிறைந்துள்ளது. கடவுளே அடிக்கிறார். அவரே
அடிபடவும் செய்கிறார். படைப்பு அனைத்தும் கடவுளின் மானோ ஆட்டிங்
தனிப்பட்ட நடிப்பு கலந்த நாடகம். அதனால் யாரையும் வெறுக்காதீர்கள்.
LOVE ALL.
நன்மை:
நான்
சொல்வதெல்லாம் உங்கள் நன்மைக்காகத்தான். உங்களை தெய்வீகத்தை உணர
வைக்கத்தான். எனது செயல் களும், அறிவுரைகளும் ஆழ்ந்த உள்ளார்த்தம்
பொதிந்தவை. நமது கல்லூரி மாணவர்கள் அனைவரும் வெள்ளை நிற உடையையே
யூனிபோர்ம் ஆக அணிகிறார்கள். அதன் உள்ளார்த்தம் என்ன? வெண்மை
து}ய்மையைக் குறிக்கிறது. அதைப் போல யாரை யாவது காவி உடையில்
பார்த்தால் உனக்கு துறவு நிலை நினைவுக்கு வருகிறது. இதெல்லாம்
நீங்கள் து}ய்மையான வர்களாக, எல்லா பந்தங்களையும் விட்டவர்களாக
இருக்க வேண்டும் என்ற செய்தியை அறிவிக்கத் தான். ஏனெனில் அப்போது
தான் உங்களால் தெய்வீகத்தை அடைய முடியும்.
சுமைகள்:
இளைய
வயதினராய் இருப்பதால் உங்களுக்கு அதிகமான ஆசைகள் இருக்கின்றன.
அதனால் உடலளவிலும், மனத்தளவிலும் துன்பங்கள் ஏற்படத்தான் செய்யும்.
ஆசைகள் எல்லாம் வாழ்க்கைப் பயணத்தில் நாம் சுமக்கும் சுமைகள்.
குறைந்த சுமை, சுகமான பயணம் பயணத்தை இனிமையாக்குகிறது. உங்களது
கடைமுடி வான சேருமிடம், உயர்ந்த பேரமைதியின் உறைவிடம், அதாவது பந்த
விடுதலை. அப்படி இருக்கையில் அதிகமான சுமைகளோடு ஏன் அவதிப்பட
வேண்டும்? தேவையான அளவுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இருந்தாலே
போதுமானது. அவற்றை வைத்தே திருப்திப்படுங்கள்.
பிரானாம் தேக ரார்த்தம்
வஸ்த்ரம் ஷீத நிவாரணம்
(உணவு
உடலைப் போஷிக்க> துணிமணிகள் உடலைக் குளிரிலிருந்து பாதுகாக்க).
இன்றைய நவீன இளைஞர்கள் நாகரீகமான உடைகளை விரும்பி> கண்ணைக்கூசும்
வகையில் உடையணிகிறார்கள். இளைஞா;கள்> முக்கியமாக யுவதிகள் அத்தகைய
உடைகளை அணியக்கூடாது. நீங்கள் அணியும் உடை சிறப்பாகவும், கண்ணை
உறுத்தாத வகையிலும் இருக்க வேண்டும். சினிமா கலாச்சாரத்தைப்
பின்பற்றாதீர்கள். பிறரைப் பார்த்து நாமும் அவ்வாறே உடையணியத்
துவங்கினால் அது மிருக இயல்பு. படைப்புத் தான் தெய்வீகம். ஆசைகளை
அடக்கி வைப்பது புலனடக்கத்திற்கு உதவும், அது தெய்வீகத்துக்கு
அழைத்துச் செல்லும். பதஞ்சலி முனிவர் கூறினார் யோகஹ சித்த விருத்தி
நிரோதஹ, மனதை அலைபாய விடாமல் தடுப்பது ஒரு யோகம். அவ்வாறின்றி
அலைய விட்டால் வருவது ரோகம். இந்நாளைய மனிதன் புலனடக்கம்
இல்லாததால் ரோகியாக மாறிவிட்டிருக்கிறான். யோகியாக
மாறவேண்டுமேயன்றி ரோகியாக மாறக்கூடாது. உலகியல் சுகங்களை
அனுபவித்து வாழ்பவன் யோகியாக முடியாது. ஆனால் தியாகியாக இருப்பவன்
யோகியாக முடியும். யோகம் கைவரப்பட்டால் ரோகம் என்பது அணுகவே
அணுகாது. யோகம் என்றால் ஏதோ கானகம் சென்று துறவியாக வாழ்வது
என்பதல்ல. சிலர் காலை மடக்கிக் கொண்டு உட்காருதல், ஒரு காலில்
நிற்பது போன்றவற்றை யோகம் என நினைக்கின்றனர். உண்மையான யோகம்
என்பது உங்கள் அன்பை, இறைவனோடு இணைப்பது மட்டுமே. இறைவன் எதையும்
உங்களிடமிருந்து விரும்பவில்லை. அவர் உங்களை யோகம் செய்யவோ,
தியானம் செய்யவோ வற்புறுத்த வில்லை. அவர் கேட்பதெல்லாம், உங்கள்
இதயங்களை அன்ப, தியாகம் ஆகிய தத்துவங்களால் நிரப்பும்படிக்
கேட்கிறார். அவரது கட்டளைகளை உண்மையோடும், பக்தியோடும்
நிறைவேற்றினால் நீங்கள் கேட்காமலேயே அவர் உங்களது தேவைகள்
அனைத்தையும் நிறை வேற்றுவார். சபரியும், ஜடாயுவும் அவர்களது
வாழ்க்கையும் இதற்கு உதாரணமாக நிற்கின்றன.
ஓ மனமே எதையும் வேண்டுமெனக் கேட்காதே!
கேட்டால் அது கிடைக்கத் தாமதமாகும்!
கேட்காதே, உனக்கு அது சீக்கிரம் அளிக்கப்படும்!
சபரிக்கு கேட்காமலேயே இறைவன் தனது கருணையை மழையாகப் பொழியவில்லையா?
ஜடாயு கேட்காமலேயே, அவரது இறுதிச் சடங்கை நடத்தி முக்தி
அளிக்கவில்லையா?
தாய்
ஆகவே> இறைவனிடம் எதையும் நீங்கள் கேட்க வேண்டியதில்லை. உனக்குத்துய
இதயம் மட்டும் இருக்குமானால், அவரே உங்களது தேவைகளைப் பூர்த்தி
செய்வார். எங்ஙனம் தாய் தன் குழந்தையின் தேவைகளை கேட்காமலே செய்வாளோ
அதைப் போல. குழந்தையைப் போல இருங்கள். தெய்வீகமான இறைவி உங்களைக்
கவனித்துக் கொள்வாள். அதுதான் முழுமையான சரணாகதி, சிறிய, சிறிய
விஷயங்களையெல்லாம் விரும்பிக் கேட்காதீர்கள். ஏனெனில் அவள்
அருகாமையைத் தவறவிட்டு விடுவீர்கள். உணவு கேட்பவனுக்கு
சமையலறைக்குச் செல்ல வழிகாட்டப்படும். ஆனால் கேட்கத் தொpயாத
குழந்தைக்கு தாய் உணவளிப்பாள். அகங்காரம் உள்ள வரும், இவ்வுலகியல்
வாழ்விலேயே ஊறித்திளைப் பவரும் தான் கேட்பார்கள். ஆனால் தெய்வீகத்
தாயிடம் அவளது சங்கல்ப்பத்துக்கு அடி பணிந்து சரணாகதி செய்யும்
குழந்தை போன்றவன் அமைதியாக வாழ்வான். நாட்டியம் ஆடும் நர்த்தகி
தனது கால்களையும், கரங்களையும் மிக வேகமாக அசைத்தாலும் அவளது கவனம்
முழுவதும் தாளகதியின் மேலேயே இருக்கும். அது போல உனது கடமைகளை
நிறைவேற்றும் போதும் எண்ணம் முழுதும் இறைவன் மேலேயே இருக்க
வேண்டும்.
ஜான்சிராணி:
ஜான்சிராணி லட்சுமிபாயைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அவளுக்கு ஒரு சிறிய குழந்தை கூட இருந்தது. ஆயினும் அவளுக்கு யுத்த
மிக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிற்று. தனது
குழந்தையை முதுகில் கட்டிக் கொண்டு, கையில் வாளெடுத்து மிகக்
கடுமையான யுத்தம் நடத்தினாள். தனது குதிரை மீதமர்ந்து, விரோதிகளைக்
கொன்று தீர்த்தாள். எவ்வாறாயினும் அவளது எண்ணம் முழுவதும்>
முதுகின் மேல் கட்டப்பட்டிருந்த குழந்தையின் மேலேயே இருந்தது. அதைப்
போலவே நீங்கள் உங்களது உலகியல் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
எனினும் உங்கள் மனம் முழுதும் இறைவனைப் பற்றியே குவிந்திருக்க
வேண்டும். இதைத்தான் கரங்கள் சமுதாயத்தில் சிரமோ கானகத்தில் என்ற
பழமொழி விளக்குகிறது. எந்த விதமான ஆன்மீக சாதனையையும் நீங்கள்
மேற்கொள்ளத் தேவையில்லை. எது செய்தாலும்> அதனை இறைவனுக்குச்
செய்யும் நிவேதனமாகச் செய்யுங்கள்.
புனிதமான எண்ணங்கள் அமைய> அசைவ உணவு
சாப்பிடுவதைக் கைவிடுங்கள். புகை பிடிக்காதீர்கள்> மது
அருந்தாதீர்கள். உணவு, பணம், காலம், சக்தி ஆகியவற்றை
வீணாக்காதீர்கள். எவ்வளவு சாப்பிட முடியுமோ அந்தளவுக்கு
சாப்பிடுங்கள். ஆனால் உணவை வீணாக்காதீர்கள். ஏனெனில்
கோடிக்கணக்கானவர்களுக்கு உணவு கிடைக்காமல் அல்லலுறு கிறார்கள்.
ஒரிஸ்ஸாவைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். மிக மோசமான புயல்
தாக்கியதும் அம் மாநில மக்கள் எத்துணை துயரம் அனுபவிக்கின்றனர்? ஒரு
கவளம் உணவுக்காகவும் கூட அலைகிறார்கள். உங்களுக்கு வேண்டுமானால்
உணவின் மதிப்பு தொpயாமலிருக்கலாம். ஆனாலும் அவர்களுக்குத் தொpயும்.
ஆகவே உணவை வீணாக்காதீர்கள். அன்னம் பிரம்மா.
விரயம்:
அதே போலவே பணத்தை வீணாக்காதீர்கள். சில மாணவர்கள் ஹோட்டலில்
சாப்பிடுவதிலும்> சீட்டு விளையாடு வதிலும்> சூதாடுவதிலும் பணத்தை
விரயம் செய்கிறார்கள். பணத்தை வீண் செலவு செய்வது மிகத்தீமையானது.
உங்கள் வேலையை நீங்களே செய்யுங்கள். யாரிடமும் நீங்கள்
சார்ந்திருக்காதீர்கள். நேரம் கிடைக்கும் போது உங்கள் துணிகளை
நீங்களே துவைத்துக் கொள்ளுங்கள். நீங்களே துவைக்க முடியும் போது
இதற்காக துணி வெழுப்பவரிடம் தரவேண்டிய அவசியம் என்ன? உங்கள்
தந்தையின் பணத்தை விரயம் செய்ய உங்களுக்கு உரிமையில்லை.
காலம் தான் கடவுள் அதனால் தான் இறைவனை காலாய நமஹ, கால காலாய நமஹ,
காலதா;ப்பதமனாய நமஹ, காலாதீதாய நமஹ எனப் போற்றுகிறோம். காலத்தை
விரயம் செய்வது வாழ்க்கையை விணாக்குவதற்குச் சமம். உலகியல்
செளகாpயங்களுக்காக உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். அதற்குப் பதில்
இறைவன் நாமத்தைச் சொல்லி அதன் இனிமையில் தெய்வீகத்தை உணருங்கள்.
சக்தியையும்
வீணாக்காதீர்கள். சக்தி தான் இறைவன். புனிதமற்ற பார்வையால், தீய
எண்ணங்களால், தீயவற்றைக் கேட்பதால், அதிகமாகப் பேசுவதால் என இன்றைய
இளைஞா;கள் அதிகமான சக்தியை இழக்கிறார்கள். நம் உடலை ஒரு ரேடியோ
வுக்கு ஒப்பிடலாம். அதிகமாக அதைப் பயன் படுத்தினால் அதிலுள்ள
Cellகள் தங்கள் சக்தியை சீக்கிரம்
இழந்து விடுகின்றன. அதைப் போல நீ அதிகமாகப் பேசினால், உனது சக்தியை
இழந்து விடுகிறாய். அதனால் தான் பண்டைய முனிவர்களும், மகரிஷிகளும்
மெளனத்தைக் கடைப்பிடித்தனர். ஆகவே வாரம் ஒரு முறையாவது மெளனத்தைக்
கடைப்பிடித்து சக்தியைச் சேரியுங்கள். நான் அடிக்கடி மாணவர் களுக்கு
எடுத்துக் கூறுவேன், குறைவாகப் பேசி, நிறைவாகப் பணி செய்யுங்கள்.
அப்போது தான் உள்ளிருக்கும் சக்தி வளருகிறது. இதன் காரணமாகவே,
சன்னியாசிகளும், மகாpஷிகளும் அனேக ஆன்மீக சாதனைகளைக்
கடைப்பிடித்தனர். உள்ளிருக்கும் சக்தி வளரும் போது உங்களது
நினைவாற்றல் அதிகாpக்கிறது. மனம் நன்கு குவியும். சில மாணவர்களால்,
ஒரு கணம் கூட மனதைக் குவித்துச் செயல்பட முடியாததால், பரீட்சை
சர்யாக எழுத முடிவதில்லை. கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு,
மற்றொரு கையில் ரேடியோ செய்திகளையும், கிரிக்கட் வர்ணனைகளையும்,
விடாமல் கேட்கிறார்கள். இவ்வளவு கவனச் சிதறல்களை உடன் வைத்துக்
கொண்டு எங்ஙனம் அவர்களால் நினைவாற்றலை நிலை நிறுத்திக் கொள்ள
முடியும்?
குருகுலம்:
பண்டைக் காலத்தில் மாணவர்களுக்கு கல்வி, குரு குலங்களில்
கற்பிக்கப்பட்டு வந்தது. மாணவர்கள் தான் கற்பதனைத்தையும் நினைவிலேயே
தக்க வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அக்காலத்தில் பேப்பர், பேனா,
பென்சில் போன்ற எதுவும் ஆசிரியர்கள் கற்பிப்பதைக் குறிப்பெடுத்துக்
கொள்ள உதவியாகக் கிடையாது. அவர்கள் கற்றதெல்லாம், ஆசிரியர்
கூறுவதைக் கவனமாகக் கேட்பதினால் மட்டுமே. எனினும், அவர்களால்
உயர்ந்த கல்வியறிவு பெற முடிந்தது. நவீன கால மாணவர்களுக்கு
பேப்பர்கள், பேனாக்கள் என்ற வசதிகள் இருந்தும் பாடங்களில் கவனம்
செலுத்தாததாலும் நினைவாற்றல் இல்லாததாலம் அதிகமாக தேர்ச்சியடைய
முடியவில்லை.
இளைஞர்களே! யுவதிகளே!
உங்களுடைய
பெளதிக மனோ ரீதியான, ஆன்மீகமான, சக்திகளைப் பாதுகாக்கும் போது
நீங்கள் தெய்வீகமாகி விடுகிறீர்கள். உங்கள் தேகம் நல்ல செயல்களில்
ஈடுபடட்டும். மனம் நல்ல செயல்களில் ஈடுபடட்டும். மனம் நல்ல
எண்ணங்களை வளர்த்துக் கொள்ளட்டும். புத்தி தெய்வீகத்துடன்
ஐக்கியமாகட்டும். தேகம், மனம், புத்தி ஆகிய எல்லாம் வெறும் கருவிகளே.
இந்தக் கருவிகளை இயங்கச் செய்யும் அந்த தத்துவத்தைப் புரிந்து
கொள்ளுங்கள். நவீன கல்வி முறையனைத்தும்
Computer
(கணிணி)ஐ அடிப்படையாகக் கொண் டுள்ளது. தற்போது எங்கு பார்த்தாலும்
கம்பியூட்டருக்குச் சற்று அதிகமான மதிப்பு இருக்கிறது. நீங்கள்
வெறும்
Computer
அல்ல
Composer.
இருந்திருந்து
கம்பியூட்டர்
என்ன செய்யும்? நீங்கள் முன்னேற்பாடாக
Programme
பண்ணியதால் தான் இது இயங்கு கிறது. அதனால் தானாக இயங்கவோ, எதையும்
செய்யவோ முடியாது. கடவுள் பரிசாகக் கொடுத்த மூளைதான் உண்மையில்
நிஜமான கம்ப்!ட்டர். அதனை நல்ல முறையில் பயன்படுத்துங்கள்.
துரதிஸ்டவசமாக, நவீன மனிதன் மிஷின்களை நம்புகிறானே தவிர, இறைவனின்
பரிசான மூளையை நம்புவதில்லை.
Cal culator
களை
நம்பும் தாழ்ந்த இழி நிலை வந்து விட்டது. நீங்கள் உங்களை, உங்கள்
ஆற்றலை நம்ப வேண்டும். இறைவனிடமிருந்து மட்டும் உதவி பெறுங்கள்.
வேறு எவரிடமிருந்தும் உதவியை எதிர் பார்க்காதீர்கள். இறைவனை, அவரது
கருணையை உதாரணமாக எடுத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துங்கள்.
Help Ever Hurt
Never.
வியாச மகாஷி
கூறினார்:
பரோபகார புண்ணியாய
பாபய பர பீடனம்
(மற்றவருக்கு உதவி
செய்தல் புண்ணிய காரியம், பாபம் என்பது பிறரைத் துன்புறுத்துதல்)
இதுதான் அனைத்துப் புனித நூல்களின் சாரம். உங்களுக்கிடையே தவறான
எண்ணங்களுக்கும், சச்சரவு களுக்கும் இடம் கொடுக்காதீர்கள்.
ஒற்றுமையே மிகச் சிறந்த வலிமை. ஆகவே ஒற்றுமையாகச் செயலாற்றுங்கள்.
எங்கே ஒற்றுமையோ: அங்கே துய்மையிருக்கிறது.
எங்கே துய்மையோ: அங்கே தெய்வீகம் இருக்கிறது.
உங்கள் இதயம்
து}யதாக இருந்தால், இறைவன் உங்களது ஆசைகள் அனைத்தையும்
நிறைவேற்றுவார். உதாரணமாக உங்களுக்குப் பேனா வேண்டு மென்றால்,
இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயம் உங்களுடைய பையில் பேனா
வந்து சேரும். து}ய இதயம் இருப்பின், உங்களால் சாதிக்க முடியாதது
என்று எதுவும் கிடையாது. கடவுளைப் புரிந்து கொள்ளுதல் என்பது
இயலாது. உங்களைப் பற்றியே உங்களால் புரிந்து கொள்ள முடியாத போது,
இறைவனை எவ்வாறு புரிந்து கொள்ள இயலும்? அன்று பேசிய உமா பாரதி,
இங்கு மக்கள் வருவது இறைவனைத் தொpந்து கொள்ள, எனக்கூறினார். இது
தவறான கருத்து. இறைவனைப் பற்றிப் புரிந்து கொள்ள இங்கே
வரத்தேவையில்லை. முதலில் உங்களைப் பற்றிப் புரிந்து கொள்ளுங்கள்.
எவராலும் என்னைப் புரிந்து கொள்ள முடியாது.
வளர்ச்சி:
ஒருவனது ஆன்மீக வளர்ச்சிக்கு அவனது
ஒழுக்கம் மேம்பட்டதாக இருக்க வேண்டும். கண்வமகரிஷி தனது ஆச்சிர
மத்தில் தங்கியிருப்பவர்களுக்கு கல்வியளிக்க ஒரு குரு குலத்தை
நிறுவினார். சகுந்தலையும் கண்வ மகரிஷியின் கவனிப்பில் அந்த
குருகுலத்தில் ஒருத்தியாகக் கல்வி கற்று வந்தாள்: ஒரு முறை
துஷ்யந்த மன்னன் கண்வரின் ஆச்சிரம த்திற்கு வந்தான். அங்கே
சகுந்தலையைச் சந்தித்து மனைவியாக ஏற்றுக் கொண்டான். அவர்களுக்கு
பரதன் என ஒரு மகன் பிறந்தான். கண்வரின் ஆச்சிரமத்தில் பிறந்து
வளர்க்கப்பட்டதால் அவன் அனைத்து நற்குணங்களும் நிரம்பப் பெற்றவனாக
இருந்தான். தனது சின்னஞ்சிறு வயதிலிருந்தே நல்ல முறையில் கல்வி
பெற்று ஆன்மீகமான, நோ;மையும் ஒழுக்கமும் நிறைந்த குணநலன்கள்
வாய்த்தவனாகத் திகழ்வான். ஆனால் தந்தை துஷ்யந்தனோ உலகியல்
சுகங்களையே பெரிதாக எண்ணினான். ஆச்சிரம வாழ்க்கையும், கல்வி
முறையும் பரதனை அனைத்து நற்குணங்களுக்கும் சிகரமாக உயர்த்திற்று.
ஆனால் துஷ்யந்தனிடம் உலகியல் செல்வங்கள் அனைத்தும் ஒரு சேரக்
குவிந்திருந்தது. அவன் வலிமை மிக்க அரசன். இத்தனையிருந்தும்
நற்குணம் இல்லையெனில் என்ன பயன்? இதனை ஆச்சிரமக் கல்வி முறைக்கும்,
நகரத்துக் கல்வி முறைக்கும் எடுத்துக் காட்டாய் வைத்துக் கொள்ளலாம்.
நகரக் கல்வி முறை சிரமத் துடன் (கஷ்டங்கள்) கூடியது. ஆசிரமக் கல்வி
முறை ஆசிரமத்துடன் (கஷ்டங்களற்ற) கூடியது. நகரத்தின் கல்லூரிகளில்
மாணவர்களாகச் சோ;ந்து படிப்பதில் தவறொன்றுமில்லை. ஆனால் மாணவன்
கல்வியின் நோக்கத்தைச் சாpயான முறையில் கருத்தில் கொள்ள வெண்டும்.
தேவையற்ற உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு பாதை மாறிச் செல்லக்கூடாது.
உன்னைச் சுற்றிய ருக்கும் சுற்றுச் சூழலை வைத்தே உங்களது குணமும்
அமை கிறது. முந்தைய நாட்களில் மக்கள்:
செல்வம் போனால் எதுவும் போகவில்லை,
உடல் நலம் போனால் சிறிதளவு நஷ்டம்,
ஒழுக்கம் போனால் எல்லாமே போயிற்று எனக் கருதி வந்தனர்.
ஆனால் நவீனயுகத்தின் இளைஞர்களோ செல்வத்திற்கே மதிப் பளிக்கின்றனர்.
செல்வம் போனால் எல்லாம் போய் விட்டதாக எண்ணுகிறார்கள். அவர்களைப்
பொறுத்தவரையில் ஒழுக்கம் போனால் எதுவும் போகவில்லை.
முன்னோடி:
நான் (ஸ்வாமி) உங்களிடம் அதிகம் பேசி
தொந்தரவு செய்கிறேன் என நினைக்கிறேன். உங்களிடம் என்னால் எவ்வளவு
நேரம் வேண்டுமானாலும் பேச முடியும். ஆனால் நான் தேவையற்ற
பேச்சுக்களில் ஈடுபடுத்திக் கொள்வதில்லை. நீங்கள் தான் சத்திய சாயி
நிறுவனங்களின் முன்னோடியாகத் திகழ இருக்கிறீர்கள் என்பதை நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள். இந்த நிறுவன த்தில் பணி புரியும்
பெரியவர்கள் எல்லாம் வயதில் மூத்தவர்கள், அதனால் அவர்களுக்கு சில
கட்டுப்பாடுகள்> வரையறைகள் இருக்கலாம். இளைய தலைமுறையினர் தான்
இந்த நிறுவனங்களை முன்னின்று நடத்திச் செல்ல வேண்டும். ஒவ்வொரு
ம& |