முகப்பு


 பிரசாந்தி நிகழ்வுகள்


 சாயி அவதாரம்


 
போதனைகள்


 இலங்கையில் சாயி


 அனுபவங்கள்


 சாயி நிலையங்கள்


 சஞ்சிகைகள்


 
வெளியீடுகள்


 பொது நிகழ்வுகள்

 
பதிவிறக்கங்கள்

 படங்கள்

 உங்கள் பக்கம்

 தொடர்புகளுக்க

 
   

சத்திய சாயி சேவா நிறுவனம்

 

சத்திய சாயி சேவா நிலையங்கள் பகவான் சத்திய சாயி பாபாவின் வழிகாட்டலின் கீழ் உற்சாகம், கடமையுணர்வுடன் மனித குலத்தின் நன்மைக்காக ஆரம்பிக்கப்பட்ட ஆன்மீக அமைப்பு. இங்கு சமயம, இனம், தேசியம், சாதி, சமயக் கோட்பாடு, சமயப்பிரிவு என்ற வேறுபாடுகளுக்கு இட மில்லை. அமெரிக்கா தொடக்கம் சிம்பாப்வே வரையுள்ள சத்திய சாயி நிலையங்களில் பக்தர்கள் தாம் சார்ந்துள்ள மதங்களைப் பின்பற்றி தமது மதங்களின் போதனைகளைக் கடைப்பிடித்தும் வருகின்றனர். ஆயினும் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற பற்றுறுதியினால் உந்தப் பெற்று மனிதகுலத்தின் சேவைக்காக அவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்..

 

...........................

 

சத்திய சாயி சேவா நிறுவனத்தின் குறிக்கோள்

 

சாயிஅமைப்பின் குறிக்கோள் அதன் சாசனத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. சாயி அமைப்பின் பிரதான குறிக்கோள் கீழே விபரிக்கப்பட்டுள்ளன.

  • எமது அன்றாட வாழ்வில் ஐந்து மனித விழுமியங்களை சாதனை செய்வதன் மூலம் தாமத்தை மீண்டும் நிலை நாட்டுதல் (நல்லொழுக்கம்). இவ் விழுமியங்களினூடாக நாம் வாழ வேண்டும். அவை எமது உயிர் வாழ்வின் ஓர் அம்சமாக அமைய வேண்டும்.

  • அன்பு, போதனை ஆகிய இரண்டின் மூலமும் மனித குலத்தைச் சீராக்குதல். சுவாமியின் தெய்வீக வாழ்க்கை முறையே அவர் எமக்குப் போதிக்கும் மிக உயரிய நெறியாகும். பகவானுக்கு சிந்தனை> சொல்> செயல் மூன்றும் ஒன்று பட்டிருக்க வேண்டுமென்பது முக்கியம். அதனாலேய "எனது வாழ்க்கை முறை தான் நான் தரும் செய்தி என பகவான் கூறுகின்றார்"

  • மனிதனுக்குள் உறைந்து கிடக்கும் தெய்வீக சக்தியை அவனுக்கு உணரவைத்து அரிதான இம் மானுட பிறவிக்கே உயரியதான சிறப்பை அடைவதற்கு உதவி செய்தல் சாயி தர்மத்தை அனுசரிப்பதன் மூலமும் மனிதன் கடவுளின் மறு வடிவம் என்பதை உணரத் தலைப்படுகிறான். இம் முயற்சியின் பயனாக அத்தகைய உயர்நிலை அடைவதற்கேதுவாகத் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றான்.
     

............................

 

சத்திய சாயி சேவா நிறுவனத்தின் நிதியமும் அங்கத்துவமும்

 

வாருங்கள்: பரிசோதித்து உணருங்கள்: அனுசாpயுங்கள்> தமக்குள் குடிகொண்டிருக்கும் தெய்வீக சக்தியை உணர்ந்து அதனை அடைய வேண்டுமென்ற தீவிர வேட்கையுடையவர்கள் எல்லோ ரையும் சத்திய சாயி சேவா நிறுவனம் வரவேற்கின்றது. எந்தவித பாரபட்சமுமின்றி எல்லா இனங்கள், தேசத்தவர்கள், சமயங்கள், சாதிகள், மதப்பிரிவுகளை சார்ந்த மக்களை அதன் பணிகளில் வந்து பங்குபற்றுமாறு அழைக்கிறது. ஆன்மீக மார்க்கத்தை நாடுகின்றவர்களும், சாயி சேவா நிறுவனத்தின் நோக்கங்கள் சட்டதிட்டங்களின்படி ஒழுக விரும்புகின்றவர்களும் சத்திய சாயி சேவா நிலையத்தின் பணிகள், நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

நிலையத்தின் எந்தவொரு நடவடிக்கைக்கும் கட்டணம் அறவிடப் படுவதில்லை. பொதுமக்களிடமிருந்து எந்த வேளையிலும் நன்கொடைகள் கோருவதில்லை. சாயி சேவா நிறுவனம் மேற்கொள்ளும் காசுடன் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளுக்கான செலவுகள் யாவும் முற்று முழுதாகத் தொண்டர்கள் தாமாகவே முன்வந்து மனமுவந்தளிக்கும் நன்கொடைகளின் மூலம் நிறைவேற்றப்படுகின்றன.
 

............................

 

பிராந்திய நிலையங்கள்

இலங்கைக்குள்ளும் நிர்வாக செயற்பாட்டுகளினை நோக்காகக் கொண்டு 5 வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. வடபிராந்தியம்

2. வடமத்திய பிராந்தியம்

3. மத்திய பிராந்தியம்

4. கிழக்குப் பிராந்தியம்

5. தென் மேற்குப் பிராந்தியம்

 

 

 

     

 
     

வடக்கு வலயம்
பகவான் சிறி சத்திய சாயி சேவா சமித்தி
166/5 சேர் பொன் இராமநாதன் வீதி,
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
தொலைபேசி :+94212229476
 

       

மத்திய வலயம்
19, குமார வீதி
கண்டி
தொலைபேசி :+94118228020

       

தென்மேற்கு வலயம்
சாயி மந்திர்
22, பார்ன்ஸ் பிளேஸ்,
கொழும்பு -7
தொலைபேசி:+94112687014
 

       

கிழக்கு வலயம்
பகவான் சத்திய சாயி சேவா சமித்தி
கல்முனை