|
|
திரு. செ.சிவஞானம்
|
||
இறைவனை நோக்கிய என் பயணம் . . .
எனது முற்பிறவிகளில் செய்த நல்வினைகள் காரணமாக கலியுக அவதாரமாக அவதாpத்திருக்கும் பகவான் சத்திய சாயி பாபாவுடன் நேரடியாகப் பழகக்கூடிய பெரும் பேறு எனக்குக்கிடைத்தது. எனது வாழ்க்கையில் எனக்குக்கிடைத்த பெருங்கொடை எனக் கருதுகிறேன். பலவித குறைபாடுகள் என்னில் இருந்தும், என்னைத் தன்னுடைய அளப்பெருங் கருணையால் பாதுகாத்து, வழிகாட்டி ஒரு சாpயான பாதை யில் செல்ல வழிகாட்டி விட்டார். இனி எத்தனை பிறவி வந்தாலும், அவருடைய கருணை என்மீது இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையைத் தவிர வேறெதுவும் எனக்குத் தேவையில்லை. எனது வாழ்க்கைப் பயணத்தில், இறைவனை நோக்கிய பயண அனுபவங்களில் ஞாபகத்தில் உள்ள சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், எனது சற்குருவில் நீங்களும் ஆழமான நம்பிக்கை கொள்ள முடியும் என்ற நோக்கோடு உங்களுடன் என் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முதல் அனுபவம் யாழ்ப்பாணத்தில் சாயியின் அறிமுகம் 1965 ஆம் ஆண்டில் ஏற்பட்டது. கூட்டுறவு உதவி ஆணையாளராக (A.C.C.D) பதவி வகித்த திரு. K.S. பொன்னுத்துரையின் வீடு சுண்டிக்குளி மகளிர் கல்லூரிக்கு முன்பாக இருந்தது. அங்கு நான் மாலை வேளைகளில் சென்று ஆத்மீகமாக உரையாடுவது வழக்கம். (அவர் பின்னர் யாழ். சமித்தி தலைவராக இருந்தார்) ஒரு நாள் பாபாவைப் பற்றிப் பேச்சு வந்தது. திரு.பொன்னுத்துரை தாம் அறிந்த சில செய்திகளையும், அற்புதங்களையும் கூறினார். நானும் எனக்குத் தொpந்த சில செய்திகளைக் கூறினேன். அப்போது பாபாவின் படம் கிடைக்க வில்லையே என்று இருவரும் பேசிக் கொண்டோம். சிறிது நேரத்தில் பழைய புத்தகங்கள் விற்பவர் ஒருவர் தெருவால் போய்க் கொண்டிருந்தார். அவரை நாங்கள் அழைத்து சில பழைய சஞ்சிகைகளை எடுத்துப் புரட்டிப் பார்த்தோம் எனது கைகளில் ஒரு பழைய "Illustrated Weeakly of India" என்ற சஞ்சிகை அகப்பட்டது. அதைப்புரட்டியதும், பகவானின் ஒரு அழகான பெரிய படம் காணப்பட்டது ஆச்சரியத்துடன் நான் அந்த பகவானின் பொன்னுத்துரைக்கு காட்டினேன். அந்தப் பிரதியை உடனே வாங்கிக் கொண்டேன். அது தான் யாழ்ப்பாணத்திற்குக் கிடைத்த முதற்படம் எனக் கருதுகிறேன். அதை இப்போதும் எனது வீட்டில் மாட்டி வைத்துள்ளேன். இது எனது வாழ்க்கையில் நடந்த முதலாவது அற்புதம். படம் கிடைக்க வில்லையே! என்று கவலைப்பட்ட சில நிமிடங்களில் படம் கிடைக்கச் செய்தது, எனது நம்பிக்கையை ஆழமாக்கி விட்டது. தற்போது இலட்சக்கணக்கான படங்கள் கிடைக்கக் கூடியதாக உள்ளது. 1965 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு படம் கிடைப்பது பெரும் பாக்கியமாகக் கருதப்பட்டது. "பிரேம மூர்த்தியே நம:"
முதல் புட்டபர்த்தி தரிசனம்
படம் கிடைத்ததும் அவரைத்
தாpசிக்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. அடுத்த வருடமே அதாவது 1966ல்>
மலேசியாவில் கல்வி அதிகாரியாகக் கடமையாற்றும் எனது மனைவியின் மாமனுடன்
புட்டபர்த்தி செல்ல வாய்ப்பு ஏற்பட்டது. புட்டபர்த்தி சென்றதும் அங்கு
மலசலகூட வசதி இல்லை என்று அறிந்ததும், உடனடியாக பெனுகொண்டா என்ற ரயில்
நிலையத்திற்கு திரும்பிப்போக வற்புறுத்தினார். அங்கு அரசாங்க விடுதி
ஒன்றில் தங்கிவிட்டு> அடுத்த நாள் புட்டபர்த்திக்குச் சென்றோம். அன்று
விஜயதசமி. பகவான் கும்பத்து நீரை எல்லோருக்கும் தெளித்து வந்தார். நாங்கள்
மண்டபத்தில் நுழைந்ததுமே எனது முகத்தில் நேரடியாகவே தா;ப்பையினால்
தெளித்தார். எதிர்பாரததினால் அதிர்ச்சி யடைந்து விட்டேன். முகம் முழுவதும்
நனைந்து விட்டது. இது பகவானின் முதலாவது நேரடி ஆசீர்வாதம். இது தான் 38
வருடங்களுக்கு மேலான தொடர்பின் அத்திவாரம். அடுத்த வருடம் 1967 இல் எனது
குடும்பத்தினருடன் புட்டபர்த்தி சென்றோம். முதலில் அறை ஏதாவது கிடைக்குமா?
என்ற பொறுப்பாக இருந்த கஸ்து}ரி அவர்களிடம் விசாரித்தேன். "மரங்களின்
நிழல்கள் கூட பதிவு செய்யப்பட்டு விட்டது." என்று பதில் கூறினார். பாய்கள்
வாங்கி நிலத்தில் இருந் தோம். எப்படி நாட்களைக்க கழிக்கப் போகின்றோம்
என்ற ஏக்கம். ஏனெனில் இயற்கைத் தேவைக்காக வெளியே சென்று பழக்கமில்லை. சிறிது
நேரத்தில் ஒரு தொண்டர் வந்து "நீங்கள் இலங்கையிலிருந்து வருகின்றீர்களா?"
என்று கேட்டார். உங்களுக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறி,
அறைக்குக் கூட்டிச்சென்றார். உள்ளே சென்று பார்த்த போது அது மலகூடமும்
குளியல் அறையும் சோ;ந்த ஒரு அறை. அந்த நாட்களில், புட்டபர்த்தியில் இருந்த
வசதி நிறைந்த சில அறைகளுக்குள் அதுவும் ஒன்று. கடந்த வருடம் நாங்கள் வந்த
போது, பெனுகொண்டா ரயில் நிலையத்திற்கு திரும்பிச் சென்று அரசாங்க
விடுதியில் தங்கியதை பகவான் அறிந்து, இங்கேயே சகல வசதிகளு டைய ஒரு அறையை
எமக்குத் தந்தார். தாயிற் சிறந்த தயவான தத்துவன். எங்கள் அனைவரையும்
இன்ரவியூ அறைக்கு அழைத்தார். சுமார் 45 நிமிடங்கள் எமக்கு ஒரு ஆன்மீகச்
சொற்பொழிவு நடத்தினார். 'நான் யார் என்று கேளுங்கள். இந்தக் கேள்விக்கு
சாpயான விடை கண்டீர் களானால், இது உங்களின் அநேக சந்தேகங்களைப் போக்கும்.
இதுதான் ஆன்மீகத்தின் அடிப்படை. நான் என்பது ஒன்றுதான். அறியாமையால் பலவாகக்
காண்கின்றோம். நான்கு பக்கமும் கண்ணாடி பொருத்தப்பட்ட ஒரு அறைக்குள் ஒரு
நாய் சென்றால் அது பலவிம்பங்களைக் கண்டு குரைத்து, கண்ணாடியையும் உடைத்து
விடும். கண்ணாடி உடைந்தால் அது இன்னும் பல விம்பங்களை உண்டாக்கி விடும்.
ஆனால் ஒரு மனிதன் நுழைந்தால்> தன்னுடைய தோற்றத்தையே பலவாகக் காண்பான்"
என்று பல உதாரணங்களுடன் விளக்கினார்;. நான் எனது மகனைக் காண்பித்தேன் "ஆப்பரேசன்
செய்யும் போது ஒரு நரம்பு வெட்டப்பட்டு விட்டது." என்று கூறினார். "நாங்கள்
செய்த பாபம் தானே சுவாமி?" என்றேன்." இல்லை, இல்லை, அனுக்கிரகம் உண்டு"
என்று கூறி ஆறுதலளிக்க வீபூதியும், மருந்தும் சிருஷ்டித்து தந்தார். (வளரும்)
|
||||
|