முகப்பு


 பிரசாந்தி நிகழ்வுகள்


 சாயி அவதாரம்


 
போதனைகள்


 இலங்கையில் சாயி


 அனுபவங்கள்


 சாயி நிலையங்கள்


 சஞ்சிகைகள்


 
வெளியீடுகள்


 பொது நிகழ்வுகள்

 
பதிவிறக்கங்கள்

 படங்கள்

 உங்கள் பக்கம்

 தொடர்புகளுக்க

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சாயி வாஹினி- சிங்கப்பூர்
தமிழில் : செல்வி பத்மாசினி
நன்றி: சாயிமார்க்கம் மலர் 1 -  இதழ் 1

   

காலமும் நேரம் ஒரு பொருட்டல்ல . ..

 இரு முதிய பெண்கள் அவர்கள் இரு வரும் சாயி பக்தா;கள். அநாதை இல்லத்தில் வாழும் குழந்தைகளை வளர்க்கும் சேவாத தொண்டு செய்பவர்கள். அன்று காலநிலையும் சீராக இருந்தது. சூரியன் பிரகாசிக்கும் கோடை காலம். வானொ லியும், தொலைக்காட்சியும் வானிலை நன்றாக இருக்குமென அறிவித்தன. எனவே பொழுது போக்கிற்காக அமெரிக்க நெடுஞ் சாலையில் காரோட்டிச் சென்றனர். வெப்பமாக இருந்ததால் மெல்லிய உடையை அணிந்தி ருந்தனர் பிற்பகல் ஆக திடீரென வானம் கறுத்து மழை பெய்யத் தொடங்கியது. அதன் பின் பனி கொட்ட ஆரம்பித்தது. பனியில் காரை ஓட்டி வீடு திரும்ப முடியாத நிலையில் அவர்கள் அருகில் உள்ள விடுதியில் தங்க உத்தேசித்தனர். ஆனால் விடுதிகள் யாவற்றிலும் இடமில்லை என்ற அறிவித்தல்களே காணப்பட்டன

 

 காரோட்டுவது மேலும் சிரமமானபடியால் இடமில்லை என்ற அறிவித்தல் இருந்தும் வேறு வழியி;ல்லாததால் காரைக் கொண்டு அருகே தென்பட்ட விடுதியில் நுழைந்தனர். வாகனம் தாpக்கும் இடங்கள் யாவும் போக்குவரதது பஸ்களும்> பாரமான லொறிகளும் நிரம்பி வழி;ந்தன. வீதியில் கடும்பனி வீதி மூடப்பட்டது. என அறிவி;த்தல் காட்;டியது. இந்தப் பெண்மணிகள் விடுதி வாயிலில் காரை நிற்பாட்டி விட்டு இறங்கி அன்றிரவு விடுதி வறாந்தையிலாவது தங்க இடம் கிடைக்குமா என வினாவுவதற்காக உள்ளே சென்றனர். விறாந்தை முழுவதும் சூதாட்டக் காரரும், லொறி பஸ் சாரதிகளும் குடித்துக் கொண்டும், புகைத்துக் கொண்டும். அவர்களுக்கே உரிய பெரிய கரடு முரடான மொழியில் சப்தமிட்டுக் கொண்டும் இருந்தனர். இப்படியான ஆண்கள் நிறைந்த சூழலில் மாட்டிக் கொண்டோமே எனத் தவித்தனர்.

தங்களுடைய மொழியைப் புரிந்து தங்களுடைய துன்பத்தைப் பற்றி செவிமடுத்துக் கேட்கக்கூடிய யாராவது ஒருவர் இச் சூழலில் இல்லையா என சுற்றும் முற்றும் பார்த்த போது பணம் பெறுமிடத்தில் கறுத்தத் தலைமுடியுடன் இளம் பெண்ணொருத்தி உட்கார்ந்திருப்பதைக் கண்டனர். பணம் பெறும் விடுதி உத்தியோகத்தர் போன்றிருந்தது அவள் தோற்றம். அவளருகே சென்று தாம் இரவு தங்குவதற்கு ஓர் அறையை அல்லது படிகளில் இருந்தாவது இரவைக் கழிப்பதற்கு ஒரு தலையணையாவது தருமாறு அவளிடம் கேட்ட போது அவளிடம் எதிர் மறையாகவே பதில் வந்தது> இதற்கிடையில் பாதுகாப்பு உத்தியோகத்தாpன் சீருடை அணிந்திருந்த ஒருவன் இப் பெண்மணிகளை நெருங்கி வந்தார். பாதையில் நிற்கும் இவர்களது கார் பிரதான வாயிலைத் தடை செய்வதால் உடனடியாக எடுக்குமாறு கட்டளையிட்டான். குளிர் உடையின்றி காரை நிறுத்த இடம் தேடிப் பனியில் செல்ல இவர்கள் தயங்கினர். ஏமாற்றமும் கவலையும்> விரக்தியும் அடைந்த இருவரும் சாயி பாகவானின் உதவி கோரிப் பிரார்த்தித்தனர்.

அவர்களது உறுதிப்பாட்டைக் கண்ணுற்ற காவலாளி மீண்டும் இவர்களிடம் வந்து காரை நிற்பாட்ட தான் ஒரு இடம் கண்டு பிடித்துள்ளதாகக் கூறினார். பொது நடனசாலை உரிமையாளர் கடும் பனி காரணமாகக் காரில் வராததால் வாகனசாலை பூட்டித் திறப்புடன் இருப்பதாகக் கூறினார். அதில் காரை நிறுத்துமாறு இவர்களிடம் திறப்பைக் கொடுத்தார். வாகனசாலைத் திறப்பை அடுத்த நாள் காலை நடனசாலை உரிமையாளரிடம்கொடுக்குமாறும் கூறினார். அது சுவாமியின் பேரருளே! காரை நிறுத்தி விட்டுத் திரும்பவும் விறாந்தைக்கு வந்த பெண்மணிகள் வாகனசாலையைத் தந்து அருளிய தற்கும் இரவை இலகுவாகவும், பாதுகாப்பாகவும் கழிக்க உதவியதற்கும் பகவானுக்கு நன்றி கூறித் துதித்தனர்.

சிறிது நேரத்தில் பணம் பெறுமிடத்தில் இருந்த பெண் இவர்களை அழைத்து விடுதி உரிமையாளரின் அறை மேலே காலியாக இருப்பதாகவும், அந்த அறையைத் தருவதாகவும் ஆனால் எவருக்கும் இது பற்றிக் கூறமாட்டோம் என்று உறுதியளித்தாலே தரமுடியும் என்றாள். இல்லாவிடின் தனது வேலையை இழக்க நோpடும் என்றும் கூறினாள். பாதுகாப்பு உத்தியோகத்தனை அழைத்து அந்த அறையைக் காண்பிக் குமாறும் கேட்டுக் கொண்டாள். அங்கு சென்றதும்> ஐந்து நட்சத்திர விடுதியிலும் கிடைக்காத பொருத்தமான சிறப்பான இடம் கிடைத்திருப்பதைக் கண்டனர். அவர்கள் நன்கு குளித்து> தொலைக்காட்சி பார்த்து விட்டு இரவு முழுவதும் அங்கே நிம்மதியாகவும்> பாதுகாப்பாகவும் அயர்ந்து நித்திரை கொண்டனர். அடுத்த நாட்காலை பணம் பெறும் இடத்தி லிருந்த பெண்ணுக்;கு நன்றி கூறக் கீழிறங்கி வந்தனர். அவளை எங்கேயும் கண்டு பிடிக்க முடியாமற் போனது. அந்த விடுதியில் காசாளராக என்றுமே பெண்களை வேலைக்கு அமர்த்தியது கிடையாது என்றும் சீருடையுடன் பாதுகாப்பு உத்தியோகத்த்தர் என்றுமே வேலை செய்வதே இல்லை என்றும் விசாரித்த போது அறிந்து கொண்டனர்.

அவர்களால் நம்பவே முடியவில்லை! காசாளர் பெண்ணு டனும், சீருடைப் பாதுகாப்பு உத்தியோகத்தவருடனும் முதல் நாள் இரவு பல தடவை தாம் கதைத்ததாக வாதாடியும் பார்த்தனர். அப்பொழுதும் அதே விடை தான். கிடைத்தது. ஆச்சாpயமும் குழப்பமும் அடைந்த அவர்கள் தாம் தங்கிய அறையை போட்டோ எடுக்க மேலே சென்றனர். அங்கும் ஓர் ஆச்சாpயம் காத்திருந்தது. அப்படி ஒரு அறையே அங்கு இல்லை. அவர்கள் தங்கிய அறை இனிமேலும் அங்கே இருக்க முடியாது. என்பதைப் புரிந்து கொண்டனர்.

சுவாமி தம் அருமைப் பக்தா;களுக்காக பாதுகாப்பான வசதியான அறையை இரவு படைத்துக் கொடுத்தாரா? அவர்கள் அறையை விட்டு நீங்கியதும் அதனை மறையச் செய்தாரா? புட்டபர்த்தியிலிருந்து பூமியை அரை வலம் கடந்து அமெரிக்கா வந்தது மாத்திரமன்றி ஒரே சமயத்தில் பணம் வசூலிக்கும் பெண்ணாகவும் சீருடை தாpத்த பாதுகாப்பு உத்தியோகத்தராகவும் அங்குள்ள ஏனையவர்கள் கவனிக்காத வகையில் தோன்றினாரா?

ஒரு கடவுள் அவதாரத்தாலேயே .அப்படியான அற்புதங் களைச் செய்ய முடியும். வேண்டுவோருக்கு வேண்டுவதை அருள முடியும். அவர்களின் அற்புதமான தன்னலமற்ற சேவைத் தொண்டு என்னும் சாதனையினால் மனமகிழ்ந்த சுவாமி அன்றிரவு அவர்கள் விடுதியில் தங்குவதற்கு முடியாமல் ஏற்பட்ட சிக்கலை நிவர்த்தி செய்து அற்புதமான லீலைகள் புரிந்து ஒரு நாடகமே அந்த விடுதியில் நடத்தி முடித்தாரா?

 

ஆதாரம்: சம்பந்தப்பட்ட பெண்மணிகளின் விவரண ஒலி நாடாவிலிருந்து.

தொகுப்பு: ஜி.கருணாகரன். சாயி வாஹிணி சிங்கப்பூர் 1993 சுவாமியின் 68 ஆவது பிறந்ததின விசேட வெளியீட்டு மலர்

தமிழில்: செல்வி.த.பத்மாசனி