| 
		உங்கள் ஆக்கங்களை எமக்கு 
		அனுப்பி வைத்தால் நாம் இப்பகுதியில் இணைத்துக் கொள்வோம்.
 
		ஆக்கங்களை அனுப்ப
     
				வினா - விடை 
 
				  
				வினாமாமிசம் சாப்பிடுவது தவறானதா?
 
				  
				விடைஎவரெல்லாம் 
				ஆன்மீகப் பாதையில் செல்ல விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் புகை 
				பிடிப்பது> குடிப்பது> மாமிசம் சாப்பிடுவது> சூதாடுவது இவற்றைவிட 
				வேண்டும். இந்த நான்கு தீய பழக்கங்களும் ஆன்மீக வாழ்;க்கைக்கு 
				ஏற்றது அல்ல. ஒரு சிறிது யோசித்துப் பாருங்கள் உங்களுக்கு 
				இருக்கும் இந்த மாமிசம் உண்ணும் பழக்கத்தினால் மாமிசம் விற்பவர்கள் 
				ஏதும் அறியாத மிருகங்களைப் பிடித்துக் கொல்வதில் ஈடுபடுகிறார்கள். 
				அந்த மிருகங்களின் சாவுக்கு நீங்கள் தான் காரணம். உங்கள் நாவின் 
				சுவைக்கு திருப்தியளிப்பதற்காக எத்தனையோ ஒன்றும் அறியாத கால்நடைகள் 
				கொல்லப்படுகின்றன என்பது மிகவும் சோகமானது அல்லவா? எப்போதும் 
				உதவுங்கள்> எவரையும் துன்புறுத்தாதீர்கள். இது தான் உண்மையான மனித 
				குணநலன்> வழிபாடும் புண்ணிய சேத்திரங்களுக்குச் செல்வதும் மட்டும் 
				தான் ஆன்மீகம் என எண்ணாதீர்கள். அவை ஆன்மீகப் பயிற்சிகள் மட்டுமே.
 (21.11.1995 பகவானின் அருளுரையிலிருந்து)
 
 
 
 
				  
				  
				வினாவயதான காலமே ஆன்மீக ஈடுபாட்டுக்குரியது எனப் பலரும் கூறுகிறார்கள். 
				இது சாpதானா? உண்மையில் ஆன்மீகத்தில் ஈடுபடுவதற்குரிய காலம் எது?
 
				  
				விடைஆன்மீக ஈடுபாட்டிற்கென ஒரு வயது எல்லை வகுக்க முடியாது. அப்பர் 
				சுவாமிகளுக்கு முது வயதில் கிடைத்த இறை அனுபவம் சம்பந்தருக்கு 
				மூன்று வயதில் கிட்டவில்லையா? தமது குடும்பக் கடமைகளை நிறைவேற்றி 
				முடித்து தொழிலிருந்து ஓய்வு பெற்றும் இருப்பதால் பலரும் தமது 
				ஓய்வான இறுதி காலத்தை ஆன்மீக வழியில் திருப்புவது உண்மை தான்.
 
 ஆனால் நல்லொழுக்கம்> நற்சிந்தனை> நன்முயற்சி என்பன தெய்வ 
				பக்திக்குரிய முக்கிய அம்சமாகும். இவை பொதுவில் சிறுவயதிலிருந்தே 
				வளர்க்கப்பட வேண்டியவைகளாகும்.
 
 "இளம் நிலையிலேயே மரக்கன்றை நேராக வளரச் செய்ய உதவலாம். ஆனால் அது 
				மரமாக வளர்ந்த பின்னர் அவ்வாறு உதவி செய்ய முடியாது குழந்தைப் 
				பருவத்தலி; எது சாp> எது தவறு என்று அறியாது நீங்கள் வழிதவறிச் 
				செல்ல முடியும். கடவுளின் பாதையை எவராவது வழிகாட்டியிருந்தால் நல்ல 
				பாதையை தொpவு செய்திருப்பீர்கள்" என பகவான் கூறுகிறார்.
 
 எனவே வயதான காலம் தான் ஆன்மீக ஈடுபாட்டிற்கு உரியது எனக் கூறுவது 
				பொருந்தாது. நல்லதைச் செய்வதற்கும்> நல்லவற்றைச் சிந்திப்பதற்கும் 
				நல்லபடி வாழ்வதற்கும் இதுதான் காலம் என ஒரு காலத்தைக் குறிப்பிடுவது 
				எப்படிப் பொருந்தும்? நல்லதை நினை. நல்லதையே செய்: நல்லதையே நாடு 
				என்பது எக்காலத்திற்கும் பொருத்தமான ஒன்றாகும். எனினும் இளமையில் 
				கல்வி சிலையில் எழுத்து என்பது மனதில் கொள்ளத்தக்கதாகும்.
 
 
 |