| 
 | 
		 | |||
| 
 | ||||
| 
		 | 
		உங்கள் ஆக்கங்களை எமக்கு 
		அனுப்பி வைத்தால் நாம் இப்பகுதியில் இணைத்துக் கொள்வோம். 
		கவிதை 
 
 விடுமுறை பள்ளிக்குத் தானே விடுமுறை - உன் படிப்புக்கு ஏது விடுமுறை உன்னிடம் அன்பாய்ச் சொல்கிறேன் நீ சிந்தித்துப் பாரு ஒருமுறை சோம்பிப் படுப்பது ஓய்வன்று வேலையில் மாற்றமே ஓய்வாகும் ஏட்டுப்படிப்பில் ஓய்வெடுத்து செயல்முறை அறிவைய் வளர்த்திடுவாய் அநுபவப் பாடம் உலகதனில் அவசியம் நீயும் பெற்றிடணும் நுட்பங்கள் பலவற்றைக் கற்றிட்டு நுண்ணிய அறிவை வளர்த்திடனும் ஆதவன் போன்று அனுதினமும் மாதா கடமை செய்கையிலே ஓயாமல் உழைக்கும் தந்தையுமே மக்களை முன்னேற்றத் துடிக்கிறார் தரமான கல்வி பெற்றிடவும் - உயர் தரமான வாழ்வு வாழ்;ந்திடவும் மாதா பிதா குரு படும்பாட்டை மகனே நீயும் உணராயோ நாளும் பொழுதும் முயன்று நீ முழுமையான கல்வி பெற்றிடுவாய் சோம்பிக் கிடக்கவே லீவென்று தப்பாய் நீயும் நினைக்காதே அறிவுடன் நுட்பம் பயிலுதலும் ஆர்வமாய் கற்றதைக் கடைப்பிடித்தும் சீரான மனப்பாங்கை உருவாக்கி சிறப்பாய் நீயும் வாழ்ந்திடனும் 
		 
 - திருமதி.சி.இரவீந்திரன் | |||