முகப்பு


 பிரசாந்தி நிகழ்வுகள்


 சாயி அவதாரம்


 போதனைகள்


 இலங்கையில் சாயி


 
அனுபவங்கள்


 சாயி நிலையங்கள்


 சஞ்சிகைகள்


 வெளியீடுகள்


 பொது நிகழ்வுகள்

 பதிவிறக்கங்கள்

 படங்கள்

 உங்கள் பக்கம்

 தொடர்புகளுக்க

 

 

 

1. ராதாகிருஷ்ணன்
          வருடம் 1953. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். வயது அறுபது. ஒரு தொழிற்சாலையின் சொந்தக்காரர் அ+வார்.

அவருக்குக் குடலில் அல்சா; ஏற்பட்டிருந்தது. அதனால் சீக்கிரமே அதிக நோவு அடைந்தார். நிலை கவலைக்கிடமாகி விட்டது. அப்பொழுது சிலர் பாபாவைப் பற்றி அவரிடமும்> உறவினர்களிடமும் கூறினார்கள். உடனே ராதாகிருஷ்ணனை அழைத்துக் கொண்டு அவரது உறவினர்கள் புட்டபர்த்திக்கு வந்து சோ;ந்தார்கள்.

பாபா வெளியே தாpசனம் அளிப்பதற்காக வந்த போது> ராதாகிருஷ்ணனும் கூட்டத்திடையே சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். பாபா கூட்டத்தினரைப் பார்த்து விட்டு திரும்பினார். ராதாகிருஷ்ணனை அவர் சிறிதுகூடப் பொருட் படுத்தவில்லை. பின்னர் ராதாகிருஷ்ணன் திடீரென்று இறந்து விட்டார். செய்தி பாபாவிடம் சென்றது. பாபாவும் இறந்தவரது அறைக்குச் சென்றார். அவர் அந்த தொழிலதிபரின் மனைவி யையும், பெண்ணையும் பார்த்தார், அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள் கவலைப்படாதீங்க எல்லாம் சாpயாகி விடும் என்று கூறினார் பாபா. பிறகு அறையை விட்டு வெளியே போனார்.

அவரது வார்த்தைக்கு நிச்சயம் ஏதாவது பலன் இருக்கும் என்று எல்லோரும் நம்பினார்கள். எனவே உடலை இரண்டு நாட்கள் தகனம் செய்யாமல் அந்த அறையிலேயே வைத்திருந்தார்கள். பாபாவிடமிருந்து எந்தவிதச் செய்தியும் வரவில்லை. ராதாகிருஷ்ணனின் உடல் விறைக்க ஆரம்பி த்தது. அத்தோடு உடல் உள்ளே அழுகி நாற்றம் வெளியே வீசத் தொடங்கியது. தொழிலதிபரின் மனைவியும், மகளும் அழுதார்கள். புட்டபர்த்திக்கு வந்தும் பாபாவின் அருள் கிடைக்க வில்லையே என்று வருந்தினார்கள். பாபாவிற்கு அவர்களது செய்தி எப்படிக் கிடைத்ததோ தொpயாது: திரும்பவும் வந்தார் அவர். அங்கே அழுது கொண்டிருந்த உறவினர்கள் எல்லோரையும் வெளியே போய் இருக்கும்படி கூறினார்.

எல்லோரும் போனதும்> அறைக்குள் இருந்த பாபா கதவைத் தாளிட்டுக் கொண்டார். அந்த நாற்றமான இடத்தில் அவர் எப்படி இருக்கிறார் என்று பலர் எண்ணினார்கள். நிமிடங்கள் ஓடின. பாபா கதவைத் திறந்து வெளியே வந்தார்.


ராதாகிருஷ்ணனின் உறவினர்களை அழைத்தார், அவர்கள் பாபாவைப் பார்த்து விட்டு> ராதாகிருஷ்ணனை பார்த்ததும் அதிசயித்துப் போனார்கள். ஏனெனில் ராதாகிருஷ்ணன் படுக்கையில் அமர்ந்திருந்தார்.

அவர் முகத்தில் ஒரு குறுநகை ஓடியது. உறவினர்களைப் பார்த்து நீங்கள் எல்லாம் ஏன் கவலைப் படுகிறீர்கள்? எனக்குச் சாpயாகிவிட்டது என்று கூறினார். இப்பொழுது பாபா ராதா கிருஷ்ணனின் மனைவியை நோக்கித் திரும்பினார் இதோ பாருங்கள் உங்கள் கணவரைத் திரும்ப உங்களிடம் கொண்டு வந்து விட்டேன். அவருக்கு சூடாக ஏதாவது கொடுங்கள் என்றார்.

எல்லோரும் அதிசயத்துடன் ராதாகிருஷ்ணனை சூழ்ந்து கொண்டார்கள். ராதாகிருஷ்ணன் நல்ல ஆரோக்கியமாக இருந்தார் மறுநாள் எழுந்து நடக்க ஆரம்பித்தார். வயிற்றிலிருந்த புண் போன இடம் தொpயவில்லை.

அடுத்த சில நாட்களில், அதே நோயாளி தமது உறவினர் ஒருவருக்குப் பக்கம் பக்கமாகக் கடிதம் எழுதினார். பாபா தமது 26 ஆவது வயதில் நடத்திய அற்புதம் இது.


2. வால்டர் கோவான்
வால்டர்கோவான் தன் மனைவி எல்ஸி (
Elsie) வால்டர், கன்னமாரா ஹோட்டலில் தங்கியிருந்தார். டிசம்பர் 25 அன்று காலையில் மாரடைப்பினால் மரணமடைந்தார். பிறகு பகவான் பாபாவின் அருளினால் உயிர்த்தெழுந்து, பின் குணமடைந்தார். அப்போது நடந்ததென்ன என்பதை வால்டர் பின்னர் விபரித்தார். தான் இறந்ததை அவரே கண்டார். அம்புலன்சில் இருந்த உடலுடன் அவரும் அருகிலேயே இருந்தார். ஆவலுடன் நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது பாபா வந்தார். இருவரும் வெகு உயரத்தில் இருப்பது போல் ஓரிடத்திற்குச் சென்றனர். ஆலோசனைக் கூட்டம் நடந்த அறைக்குள் சென்றனர். அங்கு பலர் மேசையைச் சுற்றி உட்கார்ந்திருந்தனர். கூட்டத்தலைவர் அன்புடன் பேசினார். வால்டர் பற்றிய தஸ்தா வேஸ்துகளை வரவழைத்தார் அவை படிக்கப்பட்டன. அவை பல மொழிகளில் எழுதப்பட்டிருந்தன. என்ன சொல்லப் பட்டிருந்தது என்று வால்டருக்குப் புரியவில்லை. பாபா மொழி பெயர்த்துக் கூறினார். பல்வேறு காலங்களில்> பல்வேறு கலாச்சாரங்களில் தான் உயர்ந்த பதவிகள் வகித்து வந்ததையும்> மக்களின் நலனுக்காக முழுமையாக ஈடுபட்டது பற்றியும் கேள்விப்பட்டு வால்டர் அதிசயமடைந்தார். பின் அங்குள்ள தலைவரிடம் பாபா> வால்டரைத் தன்னுடைய பாதுகாப்பில் அனுப்ப வேண்டு மென்றும், வால்டருக்குச் சில வேலைகள் அளிக்க இருப்பதாகவும் கூறினார். பின் பாபாவும், வால்டரும் அவ்வறையினை விட்டு வெளியே வந்தனர். வால்டர் உடல் இருந்த இடத்திற்கு தான் கீழே இறங்கி வருவதை உணர்ந்தார். ஆனால் அவருக்கு கீழே வர விருப்பமில்லை. இந்நிலையில் தான் உடலல்ல என்பதை உணர்ந்தார். மறுபடியும் உடலின் துன்பங்களுக்கும் கவலை களுக்கும் உட்படுத்திக் கொள்ள விரும்ப வில்லை. இவற்றை நான் கேட்டதும் பாபாவிடம் வால்டர் இந்த சம்பவங்களைக் கற்பனை செய்து கொண்டாரா என்று பாபாவை கேட்டேன். இவை கற்பனையல்ல இந்தச் சம்பவங்கள் உண்மையே என்று பாபா கூறினார். இவை வால்டரின் மனதில் நிகழ்ந்தன. பாபாவே இவ் எண்ணங்களை வழி நடத்தினார்  ஒவ்வொருவருக்கும் மரணத்தின் போது இதே போன்ற அனுபவ ங்கள் இருக்கும். சிலருக்கு இராது என்று பாபா கூறினார். பல வருடங்கள் கழித்து பாபாவிடம் மறுபடி கேட்டேன். சவம் எல்லோருக்கும் பொதுவானது: அதற் கப்பால் பொதுவான அனுபவம் என்பது இல்லை என்று பாபா கூறினார்.

(Ref: My Baba and I - by Dr.John S. Hislop)
 

 

சாயி கிருஷ்ணன்
(அமெரிக்காவைச் சோ;ந்த ஹீஸ்லாப்> தனது அனுபவத்தை வருணிக்கிறார்.)
பல ஆண்டுகளுக்கு முன்னர் பாபாவின் காரில் உட்கார்ந் திருந்தேன். அவர் பின்னால் இருவருடன் உட்காரந்திரு ந்தார். நான் டிரைவருடன் முன் சீட்டில் உட்கார்ந் திருந்தேன். புட்டபர்த்திக்கு நாங்கள்சென்று கொண்டிருந் தோம். பாபாவுடன் காரில் பயணியாகச் செல்வது ஒரு அற்புதமான அனுபவம், சில சமயங்களில் கூட இருப்பவர் களுடன் தெலுங்கில் பேசுவார். சில சமயங்களில் அமைதியாக அமர்ந்திருக்கையில் கைகள் வேறு எதனையோ நினைத்து அசைந்து கொண்டிருக்கும். (என்னைத் தவிர) மற்ற எல்லோ ருடனும் சோ;ந்து பஜனைகள் பாடுவார். ஆகையால் அடிக்கடி நான் திரும்பிப் பார்த்;துக் கொண்டே யிருப்பேன். பாபாவும் என்னைத் தடுப்பதில்லை.

அதே போல இந்தத்தடவையும் நான் திரும்பிப் பார்த்தேன். நான் கண்ட காட்சி நிலைகுலையச் செய்தது. என் மூச்சு நின்று விட்டது. நான் ஸ்தம்பித்தேன். என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. பாபாவின் பக்தா;கள் அவரது அழகினைப் புகழ்வார்கள். என்னைப் பொறுத்த வரையில் அவரது கம்பீ;ரமும் சக்தியுமே அவரது தோற்றத்தில் பரிமளித்தன. நான் நிலைகுலையக் காரணம் அவரது முகம் முழுமையாக வேறாகத் தோற்றமளித்ததுதான். அந்த முகம் மிகுந்த அற்புதமான எழில் மிகுந்த முகமாக இருந்தது. எனது அன்பின் சாயியின் திருமுகத்தினின்று வேறுபட்ட அமைப்பைக் கொண்டது. அளவுக்கு மீறிய ஆனந்த உணர்ச்சி இதயத்தைப் பிழிய, எனக்கு வலி யேற்பட்டது போலத் தோன்றியது. என்னுடைய வாழ்க்கையிலும், புகைப்படங் களிலும், சிறந்த ஓவியர்களின் வர்ண ஓவியங்களிலும் இத்துணை அழகுள்ள முகத்தை நான் கண்டதேயில்லை. அது என் கற்பனைக்கு எட்டாத அழகிய முகம்.

பாபாவின் முகம் அப்போது நீலமாக இருந்தது. படங்களில் காணும் நீலமல்ல. வானத்தில் காணும் வெல்வெட் நீலம் போன்ற ஆழ்ந்த நீலம். கரையிலிருந்து ஆயிரம் மைல்களுக் கப்பால் பசுபிக் கடலின் மையத்தில் கப்பலின் மேலிருந்து காணும் போது தோன்றும் ஆழ்கடல் நீலம். எவ்வாறு வர்ணிப்பதென்றே எனக்குப் புரியவில்லை.

மறுபடியும் மறுபடியும் அவரது முகத்தை நான் பார்த்துக் கொண்டே இருந்தேன் 15 நிமிடங்கள் இவ்வாறு கழிந்தன. சிறிது து}ரம் சென்றதும், பாபாவின் இடது பக்கமிருந்த விட்டல்ராவ. ஹிஸ்;லாப் ஸ்வாமியை விழித்த கண் வாங்காமல் பார்க்கிறீர்கள்? என்று கேட்டார். அவருக்கு விடை கூறவில்லை. பாபாவிடம் நேராக ஸ்வாமி அத்தகைய நீலம் எப்படி வந்தது? என்று கேட்டேன். பாபா அதற்கு அளவற்ற ஆழமுள்ள எதுவும் கருநீலமாகத் தோன்றும் என்றார்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர், 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்திய தரைப்படையைச் சோ;ந்த ஒருவர், அவரது மனைவி, அவரது மகன், மகள் ஆகியோருடன் சோ;த்து என்னையும் ஸ்வாமி பேட்டிக்குக் கூப்பிட்டிருந்தார். உள்ளே நாங்கள் சென்றமர்ந்த பின் அவர்களிடம் மிகவும் அன்பாக குடும்ப விடயங்களைப் பற்றி ஆங்கிலத்தில் பேசினார். பிறகு என்பக்கம் திரும்பி ஹிஸ்லாப், உன்னுடைய சில அனுபவ ங்களை அவர்களிடம் கூறு என்றார். நான் சில நிகழ்ச்சிகளைப் பற்றிக் கூறிய மேற்கண்ட அனுபவத்தையும் கூறினேன். உடனே அந்தப் போர் வீரர் நீங்கள் கிருஸ்ணரைத் தாpசனம் செய்திருக் கிறீர்கள் என்றார்.

பாபா சிரித்துக் கொண்டே ஆம் அது கிருஸ்ணனே தான், படத்தில் காணும் கிருஸ்ணனல்ல. ஹீஸ்லாப்புக்கு உண்மை யான கிருஸ்ணனையே காண்பித்தேன் என்றார். ஒரு மாதங் கழித்து டிசம்பர் மாதத்தில் பாபாவுடன் பேசுகையில், கிருஸ்ணனுக்குப் பிறகு, பாபாவை - குருவை அடைந்த நாம் பாக்கியசாலிகள் என்பதைத் தொpவிக்க எண்ணங் கொண்டு நான் பாபாவிடம் ஸ்வாமி கிருஸ்ணனுக்குப் பின் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின் என்ற போது பாபா இடைமறித்து கிருஸ்ணனுக்குப் பிறகாவது? நான் தான் கிருஸ்ணன் கால இடைவெளி எங்கிருந்து வந்தது என்றார்.

நான் கைகளைக் கூப்பி வணங்கி, அவரிடம் ஸ்வாமி நாங்கள் பிறந்த இந்தக் காலம், ஒப்பற்றதாகும் இதற்கு மிஞ்சியது வேறு எதுவுமில்லை என்றேன். பாபாவும் ஆமோதித்து, ஆம் இது அதிருஷ்டமான காலமே தான். கிருஸ்ண அவதாரத்தை விட இப்போது பிறப்பவர்கள் இன்னும் அதிகமான பாக்கியசாலிகள் என்றார்.

(Ref: My Baba and I - by Dr.John S. Hislop)

     
 

உயிருள்ள பொருள் சிருஷ்டிப்பு

அமெரிக்கப் பெண் ஒருத்தி, அவள் பாபாவின் பக்தை அவளுடைய கணவருக்கு பாபாவிடத்தில் நம்பிக்கை கிடையாது. பாபாவைப் பற்றிக் குறை சொல்லிக் கொண்டிருப்பதே அவருக்கு வழக்கம். புட்டபர்த்தியிலுள்ள பிரசாந்தி நிலையத்திற்கு வருமாறு கணவரை அந்தப் பெண் வற்புறுத்தினாள். ஒரு முறையாவது வந்து பாருங்கள் என்று வேண்டிக் கொண்டாள். வருவதற்கு அவர் ஒரு நிபந்தனை விதித்தார். பாபாவைப் பார்க்க அனுமதி கிடைத்தால் அவருடைய தெய்வீக சக்தியை நிரூபித்துக் காட்டும்படி அவருக்கு சவால் விடுவேன் அது உனக்கு சம்மதமா என்று கேட்டார். அவர் புட்டபர்த்தி வரும் வாய்ப்பு கிடைத்தது. பாபாவையும் சந்திக்க அவருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பாபாவின் அறையில் இருந்தபோதே அவர் பாபாவிடம் சொன்னார் நீங்கள் வீபூதி, தாயத்துகள், மோதிரங்கள் போன்றன வற்றை வரவழைப்பதற்கு நான் எந்த முக்கியத்துவமும் கொடுக்கமாட்டேன். நீங்கள் உயிருள்ள ஒன்றை வரவழைத்தால் மட்டுமே தான் உங்களுடைய தெய்வீக ஆற்றலை நான் ஒப்புக் கொள்வேன்.

பாபா அவர் சொன்னதைக் கவனிக்காதவர் போல உட்கார்ந்திருந்தார். சிறிது நேரத்தில் அவரை பார்த்து கைகளைக் காட்டி என் கைகளைப் பாருங்கள் இதில் ஒன்றும் இல்லை அல்லவா? எனக் கேட்டார் அவரும் ஒன்றும் இல்லை என்பதை ஒப்புக் கொண்டார். அவருக்கு நம்பிக்கை வரும்படியாக இரண்டு உள்ளங் கைகளையும் அவரிடம் திறந்து காட்டிவிட்டு, வலது உள்ளங்கையை இடது உள்ளங்கை மேல் வைத்து மூன்று முறை திறந்து காட்டினார். கையில் ஒன்றும் இல்லை என்கின்ற முழு நம்பிக்கையினை அவரிடம் ஏற்படுத்திய பிறகு உயிருள்ள எதை நான் உங்களுக்கு உருவாக்கி காட்ட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? எனக் கேட்டார். குரங்கை உருவாக்கிக் காட்டுங்கள் என்றார் அவர். உடனே பாபா தன்னுடைய ஒரு கையை நான்கு அங்குலம் மேலே உயர்த்தினார். அமெரிக்கா; துள்ளிக் குதித்தார். குரங்குக் குட்டி எவ்வளவு அழகாக இருக்கிறது என்று வியப்புடன் கூறினார். இப்போது பாபா தன்னுடைய ஒரு கையை எட்டு அங்குலத்திற்கு உயர்த்தினார். அதே உயரத்திற்கு குரங்கும் பெரிதாகி கத்த ஆரம்பித்தது. உடனே அந்த அமெரிக்கா; குரங்கு கத்துகிறது சுவாமி என்று கூச்சலிட்டார். இப்போது பாபா பதினைந்து அங்குல உயரத்திற்கு கையை உயர்த்தவும் முழுமையான குரங்கு உருவாகி அவர் கையில் இருந்து குதித்தது. அறையில் அங்கும் இங்கும் தாவத் தொடங்கியது. ஜன்னலில் போய் உட்கார்ந்து கொண்டது. சிறிது நேரத்தில் பாபா அமர்ந்திருந்த நாற்காலியின் கைப்பிடியில் வந்து அமர்ந்தது.

அமெரிக்கருக்கு ஒன்றும் புரியவில்லை அவமானத்தால் குன்றிப் போனார். பாபாவின் மன்னிப்பைப் பெறத் துடித்தார். அமெரிக்கா; குரங்கைக் கட்டுப்படுத்தும் படி பாபாவிடம் வேண்டிக் கொண்டார். பாபாவிடம் உரையாட விரும்புவதாகவும், இனி குரங்கு முக்கியமில்லை என்றும் சொன்னார். பாபா உடனே ஒரு வாழைப்பழத்தை வரவழைத்து குரங்கிடம் கொடுத்தார். குரங்கு அதை வாங்கிக் கொண்டு அலுமாரியின் மீது தாவி உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தது. உடனே அந்த அமெரிக்கா, பாபாவின் காலில் விழுந்து வணங்கி தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். இதோ பாருங்கள், எங்கிருந்தோ ஒன்றை என்னால் சிருஷ்டிக்க முடியும் என்றால் அதை இல்லாமல் எப்படிச் செய்வது என்பதும் எனக்குத் தொpயும் எனக்கூறிக் கொண்டு குரங்கிற்கு சைகை காட்டவும் அது பாபாவின் ஒரு கையில் வந்து அமர்ந்தது. மற்றக் கையால் பாபா அதன் தலையை அமர்த்த, அது சிறிதாகி கடைசியில் மறைந்து போயிற்று. குறிப்பிட்ட நபரின் சந்தேகத்தைப் போக்க பாபா நிகழ்த்திக் காட்டிய அற்புதம் இது. அவர் நிகழ்த்துகின்ற அற்புதங்கள் அவருடைய அறிமுக அட்டை மட்டுமே.

(நன்றி: சர்வமதப்பிரியர் சாயி பாபா)