|
|||||
|
சாயி பாபாவின் சமாதிக்குப் பின்னர் உலகெங்கும் ஏராளமான அற்புதங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன. இலங்கையில் நடைபெற்ற அற்புதங்கள் சில எமக்குக் கிடைத்துள்ளன. யாழ்ப்பாணம் பகவான் சத்திய சாயி சேவா நிலையத்தில்
யாழ் மருத்துவ பீடத்திற்கு அண்மையாக
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அண்மியதாக
கோப்பாயில்
கொக்குவிலில்
திருகோணமலையில்
நாச்சிமார் கோவிலடியிலுள்ள பிரசாந்தி நிலையத்தில்
யாழ்ப்பாணம் சாயி நிலையத்தில் யாழ்ப்பாணம் பகவான் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தில் பகவானின் 88 ஆவது அவதார தின நிகழ்வின் மறுநாள் நிலைய பிரார;த்தனை மண்டபத்தில் உள்ள ஈஸ்வரம்மாவின் படத்தில் விபு+தி வரத் தொடங்கியது.
யாழ்ப்பாணம் சத்திய சாயி சேவா நிலையத்தில் இன்று பஜனை நிறைவடைந்த பின்பு பிரதான வணக்க படத்திலிருந்து வீபூதி வெளிப்பட்டது. பகவானின் அவதார தின மாதத்தில் பகவான் தன் பிரசன்னத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார். அத்தோடு இம்மாதம் உலக அகண்ட பஜனை. மகளிர் தினம். பகவானின் 87 ஆவது அவதார தினம் போன்ற நிகழ்வுகளுக்கு சுவாமியின் ஆசீர்வாதம் என்றே பக்தர்கள் கருதினர்.
யாழ்ப்பாணம் சாயி நிலையத்தில் சாயி கணபதி ஆலயம் கும்பாபிசேகம் நிறைவு பெற்ற மறுநாள் காலை மண்டபம் திறந்த போது சீரடி சாயிபாபாவின் படத்தால் வீபூதி வெளிப்பட்டது.
யாழ்ப்பாணம் சத்திய சாயி சேவா நிலையத்தில் சாயிகணபதி ஆலயம் அமைக்கப்பட்டு சாயி கணபதி விக்கிரகம் கோவிலில் எழுந்தருளி வைக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளை நிலையத்தில் இருந்த 12 அடி உயரமான சாயி பாபாவின் பிரமாண்டமான கட்அவுட் படத்தில் வீபூதி வெளிப்பட்டது.
2012.02.05யாழ்ப்பாணம் சாயி நிலையத்தில் 5.2.2012 இல் வீபூதி வெளிவந்த படத்தில் இன்று மாலை (13.02.2012) வழமையான மாலை பஜனை முடிவடைந்த பின்னர் வீபூதி பெரியளவில் வெளிப்படத் தொடங்கியதுடன். அவ் வீபூதி குங்குமத்துடன் கூடியதாக வெளி வந்தமை அதிசயமாகவுள்ளது.
யாழ்ப்பாணம் சாயி நிலையத்தின் மற்றுமொரு படத்திலிருந்து வீபூதி 2012.2.5 மாலை பஜனை முடிவின் பின்ன்h வெளிப்படத் தொடங்கியது.
26.01.2012 வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு பஜனை நிறைவு பெற்ற பின்னர் பாபாவின் படத்திலிருந்து வீபூதி சொரியத் தொடங்கியது. யாழ்ப்பாணம் பகவான் சத்திய சாயி சேவா நிலையத்தில் இவ் அற்புதம் இடம் பெற்றது. அதன் பின்னர் பக்தர்கள் பலர் ஒன்று கூடி இரவு 10.00 மணி வரை பஜனை செய்தார்கள். ஏராளமானோர் வருனக தந்து தரிசித்த வண்ணமுள்ளனர். இதே வேளை நிலையத்தின் முகப்பு பகுதியில் 27.1.2012 இல் விநாயகர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்படவுள்ள செய்தி மாலை பஜனை முடிவின் பின்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. பாபாவின் நேரடி ஆசீர்வாதம் என்றே கருதமுடிவதாக நிலையத்தினர் தெரிவித்தனர்
யாழ் மருத்துவ பீடத்திற்கு அண்மையாக 7.3.2012 கலண்டரிலிருந்து வீபூதி வெளிவந்தது. அதே வேளை அறையிலிருந்த வேறு பாபாவின் படத்தாலும் ஏற்கனவே வெளிவந்த வீபூதியின் அளவு கூடுதலாக வெளிவந்தது.
2012.03.05 திகதி மாலை 6.00 மணியளவில் சாயி கீதாவுடன் உள்ள பாபாவின் படத்தால் வீபூதி வெளிவந்தது.
மருத்துவ பீடத்திற்கு அண்மையிலுள்ள சாயி அன்பரின் வீட்டில் சீரடி சாயி பாபாவின் சிலையிலிருந்து தேன் 22.2.2012 திகதி முதல் வெளி வரத் தொடங்கியது.
மருத்துவ பீடத்திற்கு அண்மையில் வீபூதி வந்த வீட்டிலுள்ள சீரடி சாயி பாபாவின் படத்திலிருந்து இன்று மதியம் (18.2.2012) குங்குமம் வெளிவரத் தொடங்கியுள்ளது. மேலும் வேறொரு படத்திலிருந்தும் வீபூதி வருகின்றது.
மருத்துவ பீடத்திற்கு அண்மையில் வீபூதி வந்த வீட்டிலுள்ள மேலும் இரு பாபாவின் படங்களிலிருந்தும் வீபூதி வெளிவருகின்றது. அதே வேளை படம் மாட்டப்பட்டுள்ள சுவரிலிருந்தும் வீபூதி வெளிவருகிறது.
மருத்துவ பீடத்திற்கு அண்மையிலுள்ள சாயி பக்தாpன் வீட்டு சுவாமி அறையிலிருந்த மற்றுமொரு பாபாவின் படத்திலிருந்து வீபூதி வெளிப்பட்டு நேரத்திற்கு நேரம் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.
8.01.2012 திகதி முதல் யாழ்ப்பாணம் கொக்குவிலில் யாழ் மருத்துவ பீடத்திற்கு அண்மையாக சாயி அன்பர் வீட்டிலிருந்த சாயி பாபா படத்திலிருந்து வீபூதி வர தொடங்கியது. அதன் பின்னர் சாயி பஜனை செய்த பின்பு பகவானின் படத்திலிருந்த வீபூதியின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது. அதே வேளை வீட்டின் மற்றோர் அறையில் மேசையிலிருந்த சிறிய பாபா படத்திலிருந்து வீபூதி மேசை பூராகவும் சிதறி வர தொடங்கியது. பின்னர் அப்படத்தையும் சுவாமி அறையில் வைத்து பிரார்த்தனைகள் மேற்கொள்ள இரு படங்களிலிருந்தும் வீபூதி வெளிவரும் அளவு அதிகாpத்துக் கொண்டே வருகின்றது. பாபா எங்கும் இருக்கிறார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அண்மியதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அண்மியதாக யாழ் சாயி நிலையத்தின் பின் பகுதிக்கு கிட்டவாக சாயி அன்பர் வீட்டில் பூஜை அறையிலுள்ள பாபா படத்தில் இருந்து வீபூதி அதிகமாக சொரிந்து கொண்டே இருக்கிறது.()
கோப்பாயில் கோப்பாயில் சாயி பக்தரின் வீட்டில் சீரடி சிலையிலிருந்து தேன் தினமும் வெளியாகிறது.
கோப்பாயில் ஓர் வீட்டில் பாபாவின் படத்திலிருந்து வீபூதி தேன் என்பன சொரிந்த வண்ணமுள்ளது.
கொக்குவிலில்
திருகோணமலையில்
திருகோணமலையில் வீபூதி வெளிவந்த சாயி அன்பர் வீட்டில் 20.2.2012 சிவராத்திரி தினமன்று சீரடி சாயி பாபாவின் படத்திலிருந்து வீபூதி வெளிவந்தது. அதே வேளை மாலை வளர்ந்த படத்திலிருந்து அமிர்தம் வெளிவந்து காய்ந்த நிலையில் உள்ளது.
திருகோணமலையில் ஏற்கனவே மாலை வளர்ந்து கொண்டிருந்த படத்திலும் தற்போது வீபூதி வெளிவரத் தொடங்கியுள்ளது.
நாச்சிமார் கோவிலடியிலுள்ள பிரசாந்தி நிலையத்தில் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியிலுள்ள
பிரசாந்தி நிலையம் சாயி பஜனை இடம் பெறும் வீட்டில் 23.11.2013 திகதியன்று
சுவாமியின் படத்திலும், லிங்கத்திலும் வீபு+தி வரத் தொடங்கியது.
|
||||